வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 5 : 1990-வந்தாறுமூலை படுகொலைகள் இடம்பெற்றன

0 84

1972: ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய 11 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டனர்

1990: வந்தாறுமூலை படுகொலைகள் இடம்பெற்றன

2018: ருபெல்லா நோயற்ற நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டது.

செப்டெம்பர் 5

1666 : லண்டன் நகரில் ஏற்பட்ட பாரிய தீ அணைந்தது. இத்தீயினால் 13,200 வீடுகளும் 87 தேவாலயங்களும் அழிந்தன. 16 பேர் கொல்லப்பட்டிருந்னர்.

1698 : ரஷ்ய பேரரசர் முதலாம் பீட்டர்இ தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி அறவிட உத்தரவிட்டார்;.

1800 : பிரித்தானியாவினால் மோல்டா கைப்பற்றப்பட்டது.

1972: ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றிய 11 இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக்கப்பட்டனர்

1839 : சீனாவில் முதலாவது ஒப்பியம் போர் சீன, பிரித்தானிய படைகளுக்கு இடையில் ஆரம்பமானது.

1880 : ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உலகின் முதலாவது மின்சார ட்ராம் வாகனம் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

1881 : அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் ஏற்பட்ட தீயினால் மில்லியன் ஏக்கர்கள் வரை சேதமடைந்தது. 282 பேர் கொல்லப்பட்டனர்.

1882 : ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

1887 : இங்கிலாந்தில் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் கொல்லப்பட்டனர்.

1905 : ரஷ்ய-ஜப்பானியப் போர்: அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டின் சமாதான முயற்சியை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் சமாதான உடன்பாடு நியூ ஹாம்ப்ஷயரில் எட்டப்பட்டு போர் முடிவூக்கு வந்தது.

1914 : முதலாம் உலகப் போரில்பாரிஸின் வடகிழக்கே பிரெஞ்சுப் படைகள் ஜேர்மனியப் படைகளை தோற்கடித்தன.

1932 : பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனி நாடுகளாகியது.

1939 : இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்கா போரில் தனது நடுநிலை தீர்மானத்தை அறிவித்தது.

1960: ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்காவின் கல்சியஸ் கிளே (மொஹமட் அலி) தங்கப்பதக்கம் வென்றார்.

1990: வந்தாறுமூலை படுகொலைகள் இடம்பெற்றன

1961 : அணிசேரா நாடுகளின் முதலாவது மாநாடு யூகோஸ்லாவியாவின் பெல்கிரேட் நகரில் இடம்பெற்றது.

1969 : அமெரிக்க இராணுவ லெப். வில்லியம் கலி, 109 வியட்நாமிய பொதுமக்களைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டான்.

1972 : ஜேர்மனியில் மியூனிக்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றச் சென்ற இஸ்ரேலிய ஒலிம்பிக் குழு உறுப்பினர்கள் 11 பேர் பணயக் கைதிகளாக்கப்பட்டனர். அன்றைய தினம் மோதல்களில் இருவரும் மறுநாள் 9 பேரும் கொல்லப்பட்டனர்.

1977 : வொயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1978 : இஸ்ரேலியப் பிரதமர் பெகினுக்கும் எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத்துக்கும் இடையில் அமெரிக்காவின் மேரிலாந்தில் சமாதான ஒப்பந்த மாநாடு ஆரம்பமானது.

1980 : உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கி.மீ.) சுவிட்ஸர்லாந்தில் திறக்கப்பட்டது.

1986 : அமெரிக்க பான் ஆம் நிறுவனத்தின் விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது.

1990 : மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2005 : சுமத்ராவில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட மொத்தம் 143 பேர் கொல்லப்பட்டனர்.

2018: ருபெல்லா நோயற்ற நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்பட்டது.

2012: தமிழகத்தின் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 40 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 50 பேர் காயமடைந்தனர்.

2012: துருக்கிய இராணுவ ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட விபத்தினால் 25 படையினர் உயிரிழந்தனர்.

2018: காணாமல் போனோருக்கான அலுவலகம் தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது.

2018: இலங்கையை ருபெல்லா நோயற்ற நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!