தங்க நகையை பறித்துச் செல்ல முற்பட்டவர்களை பாய்ந்து பிடித்த பெண் (வீடியோ)

0 1,210

தம்மிடமிருந்த தங்க நெக்லஸை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற இரு நபர்களை பெண்ணொருவர் தடுத்துப் பிடித்த சம்பவம் இந்தியாவில் டெல்லி நகரில் இடம்பெற்றுள்ளது.

டெல்லியின் மேற்குப் பகுதியிலுள்ள நஙலோய் நகரில் அண்மையில், மேற்படி பெண்ணும் அவரின் சிறு வயது மகளும் வீதியை கடப்பதற்காக காத்திருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் அவர்களுக்கு அருகில் வந்த இரு நபர்கள், மேற்படி பெண்ணின் தங்க நெக்லஸை பறித்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றபோது மேற்படி பெண்,  கொள்ளையர்களை பாய்ந்து பிடித்தார்.

அப்பெண் தனது பிடியை விடாத நிலையில், கொள்ளையர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளிலிருந்து வீதியில் விழுந்தனர்.

அதை­ய­டுத்து, அரு­கி­லி­ருந்­த­வர்கள் உத­விக்கு வர, கொள்­ளை­ய­ர்­களில் ஒருவன் மடக்கிப் பிடிக்­கப்­பட்டான். பின்னர் மேற்­படி நபரை பொலிஸார் கைது செய்­தனர். மற்­றொருவன் சம்­பவ இடத்­தி­லி­ருந்து தப்­பி­யோ­டிய போதிலும் அவனும் பொலி­ஸாரால் கைது செய்யப்பட்டான்.

இந்நபர்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், 2 தங்கச் சங்கிலிகள், தொலைபேசிகள் முதலியவற்றை கொள்ளையடித்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடியோ:   

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!