வெறுப்புணர்வைத் தூண்டும் ஒரு லட்சம் வீடியோக்கள், 17 ஆயிரம் செனல்கள் யூரியூப்பிலிருந்து நீக்கம்!

17,000 YouTube channels removed since new hateful content policy

0 1,333

யூரியூப் இணை­யத்­த­ள­த்தி­லி­ருந்து வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் வகை­யான ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான வீடி­யோக்­களை நீக்­கி­யுள்­ள­தாக யூரியூப் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. அத்­துடன் 17,000 யூரியூப் செனல்கள் முற்­றாக நீக்­கப்­பட்­ட­துடன், வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் 500 மில்­லியன் கருத்­து­களும் நீக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்­நி­று­வனம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில், உலகின் முன்­னணி வீடியோ தள­மான ‘யூரியூப்’ கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை­யி­லான காலப்­ப­கு­தியில் இது­வரை இல்­லாத அளவு 5 மடங்கு அதிக எண்­ணிக்­கை­யி­லான வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் பேச்­சுகள் அடங்­கிய வீடி­யோக்­களை நீக்­கி­யுள்­ள­தாக நேற்­று­முன்­தினம் தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து கூகுள் நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், “மதம், சாதி, பாலினம், நிறம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் வகை­யி­லான ஒரு லட்­சத்­துக்கும் அதி­க­மான வீடி­யோக்­க­ளையும், 17,000 செனல்­க­ளையும், 500 மில்­லியன் கருத்­து­க­ளையும் யூரி­யூ­பி­லி­ருந்து நீக்­கி­யுள்ளோம். இது முந்­தைய 3 மாத காலத்தில் நீக்­கப்­பட்­ட­வற்­றை­விட 5 மடங்கு அதிக எண்­ணிக்­கை­யாகும்” எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

யூரியூப் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி சுசான் வொஜ்­சிகி


யூரியூப் நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி சுசான் வொஜ்­சிகி இது தொடர்­பாக தெரி­விக்­கையில், “திறந்த மனப்­பான்மை என்­பது எளி­தா­னது அல்ல. இது சில நேரங்­களில் சர்ச்­சை­யா­கவோ அல்­லது மனம் புண்­ப­டும்­ப­டி­யா­கவோ அமைந்­து­விடும். ஆனால், சில கருத்­து­களை நாம் ஏற்­க­வில்லை என்­றாலும் கூட பல­த­ரப்­பட்ட கருத்­து­களைக் கேட்­ப­துதான் நம்மை வலி­மை­யான சமூ­க­மாக உரு­வாக்கும் என்று நம்­பு­கிறோம்.” எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

அதி நவீன தொழில்­நுட்­பங்­களைப் பயன்படுத்தும் இந்நிறுவனம், நீக்கப்பட்டவற்றில் 80 சதவீதமான வீடியோக்கள் ஒரு தடவை கூட பார்க்கப்படுவதற்கு முன்னர் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!