Singer Fashion Awards 2019 விருதுகள் விழா

0 217

Singer Fashion Academy கற்கை நிலை­யத்தில் கற்­கை­நெ­றி­களை மேற்­கொள்­கின்ற நவ­நா­க­ரிக டிப்­ளோமா மாண­வர்­களின் முயற்­சி­க­ளுக்கு அங்­கீ­கா­ர­ம­ளிக்கும் வகையில் ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­கின்ற Singer Fashion Awards 2019 எனும் விரு­துகள் விழா மற்றும் வரு­டாந்த பெஷன் கண்­காட்சி கொழும்­பி­லுள்ள ஸ்ரீமாவோ பண்­டா­ர­ நா­யக்க ஞாப­கார்த்த கண்­காட்சி மண்­ட­பத்தில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது.

இந்த ஆண்டு நிகழ்வில் 49 மாண­வர்­களின் 60 ஆக்­கங்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­ட­துடன், மேடை அணி­வ­குப்­பிற்­காக அவர்­க­ளது படைப்­புக்கள் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தன.  மொத்­த­மாக 150 வடி­வ­மைப்­புக்கள் காணப்­பட்­டி­ருந்த நிலையில் முத­லா­வது கட்­டத்தில் தெரிவு நடை மு­றையின் மூல­மாக இந்த எண்­ணிக்கை சுருக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது வரை காலமும் இடம்­பெற்ற நவ­நா­க­ரிக அணி­வ­குப்பு காட்­சிகள் மற்றும் விருது வழங்கல் வைப­வங்கள் மாண­வர்கள், அவர்­க­ளு­டைய குடும்­பத்­தினர், நண்­பர்கள் மற்றும் சிங்கர் பணி­யா­ளர்­க­ளுக்கு மட்­டுமே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், இம்­முறை இதனை அனை­வரும் கண்­டு­க­ளிக்கும் முக­மாக பொது­மக்­களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தமை பெஷன் அணி­வ­குப்பு நிகழ்வின் முக்­கி­ய­மான சிறப்­பம்­ச­மாகும்.

இந்த ஆண்டு கண்­காட்சி நிகழ்­வா­னது தொழிற்­து­றையைச் சார்ந்­த­வர்கள், பொதுப் பிர­ப­லங்கள் மற்றும் குறிப்­பி­டத்­தக்க பலர் அடங்­க­லாக பொது மக்­க­ளையும் ஈர்த்­துள்­ள­துடன், நவ­நா­க­ரிக கண்­காட்சி அணி­வ­குப்பில் பங்­கு­பற்­று­வது அவர்கள் மத்­தியில் ஊக்­கு­விக்­கப்­பட்­டுள்­ள­மையால் இனி வரும் காலங்­களில் கொழும்பில் இடம்­பெ­ற­வுள்ள நிகழ்­வு­களின் வரு­டாந்த நாட்­காட்­டியில் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்ள மற்­று­மொரு நிறு­வ­ன­மாக மாறி­யுள்­ளது.

விருது வழங்கல் நிகழ்­வுடன் இணைந்­த­தாக நவ­நா­க­ரிக கண்­காட்சி அணி­வ­குப்பும் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­வ­துடன், சிறு­வர்­க­ளுக்­கான ஆடை­யணி, ஆண்­க­ளுக்­கான ஆடை­யணி, கண்­டிய ஆடை­யணி, வழக்­க­மாக அணியும் ஆடை­யணி, அலு­வ­லக ஆடை­யணி, இந்­திய ஆடை­யணி மற்றும் மாலைப்­பொ­ழுது ஆடை­யணி ஆகிய பிரி­வு­களின் கீழ் பெஷன் கற்கும் மாண­வர்கள் போட்­டி­யி­டு­கின்­றனர்.

அவர்­க­ளு­டைய எண்­ணக்­க­ருக்­களை தெரிவு செய்­வ­தற்கு முன்­ப­தாக அவர்­க­ளது படைப்­பாக்­கத்­தி­றனை ஊக்­கு­விக்கும் வகையில், தெரிவு செய்­யப்­ப­டு­கின்ற மாண­வர்­க­ளுக்கு ஒரு நாள் இல­வச செய­ல­மர்வு ஏற்­பாடு செய்­யப்­ப­டு­வ­துடன், வர்த்­தக மட்­டத்தில் வடி­வ­மைப்­பினை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்பில் மாண­வர்­க­ளுக்கு அறி­வுட்டும் வகையில் பொருத்­த­மான ஆலோ­சனை அமர்­வு­களை தொழிற்­துறை வல்­லு­னர்கள் வழங்கி, தங்­க­ளு­டைய அனு­ப­வங்­க­ளையும் பகிர்ந்து கொள்­கின்­றனர்.

எந்த துணி வகையை உப­யோ­கிப்­பது என்­பது தொடர்­பான அவர்­க­ளது சிந்­தனை, பொத்­தான்கள், நூல், ஊக்­க­ம­ளிக்கும் படங்கள் போன்ற பல்­வே­று­பட்ட படைப்­பாக்க பாகங்­களை எவ்­வாறு ஒன்று சேர்ப்­பது என்­பன தொடர்­பான சிந்­தனா சக்­தியை எவ்­வாறு தோற்­று­விப்­பது என்­பது தொடர்பில் மாண­வர்­க­ளுக்கு கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது.

மாண­வர்கள் ஈற்­றிலே தாங்கள் தெரிவு செய்து கொள்­கின்ற குறிப்­பிட்ட தலைப்பின் அடிப்­ப­டையில் சிந்­த­னையை அல்­லது எண்­ணக்­க­ருவை வெளிக்­கொ­ணர்­வ­தற்கு இது அவர்­க­ளுக்கு உத­வு­கின்­றது.

சமூக தொழில் முயற்­சி­யா­ளரும், Singer Fashion Academy இன் வருகை விரி­வு­ரை­யா­ள­ரு­மான ஜோசி ஜோர்ஜ், கல்விக் கோணத்தில் தனது பங்­க­ளிப்­பினை வழங்­கிய மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்தின் கலா­நிதி ஜெய­மாலி டி சில்வா, தொழிற்­துறை வல்­லு­னரின் கோணத்தில் தனது அறிவைப் பகிர்ந்து கொண்ட MAS Holdings இன் சிரேஷ்ட வடி­வ­மைப்­பா­ள­ரான ரங்க குருகே ஆகியோர் இந்த ஆண்டு கண்­காட்சி நிகழ்வில் வள ஆள­ணியில் இடம்­பெற்­றி­ருந்­தனர்.

இந்த மூன்று வல்­லு­னர்­களும், கண்­காட்­சியில் தமது வடி­வ­மைப்­புக்­களைக் காண்­பித்த மாண­வர்கள் மத்­தி­யி­லி­ருந்து மாண­வர்கள் 49 பேரை இறு­தி­யாகத் தெரிவு செய்யும் நடுவர் குழுவில் அங்கம் வகித்­துள்­ளனர்.

ஒவ்­வொரு மாண­வ­ரி­ட­மி­ருந்தும் தலா ஒவ்­வொரு சிந்­தனைப் படைப்­பினை மதிப்­பீடு செய்து ஒவ்­வொரு வகைப்­பி­ரி­விலும் 12 முதல் 15 வரை­யான எண்­ணக்­க­ருக்­களை தெரிவு செய்­வதே அவர்­க­ளது வகி­பா­க­மாக அமைந்­தது.

எனினும் இறு­திச்­சுற்­றுக்கு தெரிவு செய்­யப்­ப­டாத மாண­வர்­களின் சிந்­தனைப் படைப்­புக்­க­ளுக்கு அவை ஏன் தெரிவு செய்­யப்­ப­ட­வில்லை என்ற கார­ணங்கள் மற்றும் எதிர்­கா­லத்தில் அவர்­க­ளது சிந்­த­னையை எவ்­வாறு மேம்­ப­டுத்த முடியும் என்­பது தொடர்­பான பய­னுள்ள ஆலோ­ச­னை­களும், பெறு­ம­தி­மிக்க கருத்துப் பகிர்­வு­களும் வழங்­கப்­பட்­டன.

நவ­நா­க­ரிக கண்­காட்சி அணி­வ­குப்­பிற்குப் புறம்­பாக, 69 மாண­வர்­க­ளுக்கு விரு­துகள் வழங்கி வைக்­கப்­பட்­ட­துடன், Diplomas in Scientific Dressmaking சான்­றி­த­ழையும் பெற்றுக் கொண்­டனர். மேலும் 13 மாண­வர்கள் Diploma in Machine Embroidery டிப்­ளோமா சான்­றி­தழைப் பெற்­றுக்­கொண்­டனர்.

புதி­தாக அறி­முகம் செய்து வைக்­கப்­பட்ட Fashion Designing கற்­கை­நெ­றியில் சான்­றிதழ் மட்­டத்தைப் பூர்த்தி செய்து கொண்ட 34 மாண­வர்­களும் இந்­நி­கழ்வில் தமது சான்­றி­தழ்­களைப் பெற்றுக் கொண்­டனர்.

இந்த ஆண்டு தமது மாண­வர்­களின் படைப்­புக்கள் தொடர்பில் சிங்கர் ஸ்ரீலங்கா நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யான மகேஷ் விஜே­வர்த்­தன கருத்து தெரி­விக்­கையில், இந்த ஆண்டு விருது வழங்கல் நிகழ்வில் பங்­கு­பற்­றி­யுள்ள அனைத்து டிப்­ளோமா மாண­வர்கள் மற்றும் விரு­து­களைப் பெற்­றுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு நான் முதலில் வாழ்த்­துக்­க­ளையும், பாராட்­டுக்­க­ளையும் தெரி­வித்துக் கொள்ள விரும்­பு­கின்றேன்.

தொழில் முயற்­சி­யா­ளர்­களை உரு­வாக்கி, நவ­நா­க­ரிகத் துறையில் அவர்கள் தமது தொழில் வாழ்வை முன்­னெ­டுப்­ப­தற்கு வாய்ப்­ப­ளிக்க உதவும் வகையில் சிங்கர் நிறு­வனம் மேற்­கொண்டு வரு­கின்ற முயற்­சி­க­ளுக்கு நீங்கள் காணப்­பெற்­றுள்ள பெறு­பேறு மிகச் சிறந்த சான்­றாகும்.

இளைஞர்,யுவ­தி­களை மேம்­ப­டுத்த உத­வு­வதே சிங்கர் நிறு­வ­னத்தின் பிர­தான நோக்­க­மாக காணப்­ப­டு­வ­துடன், இலங்­கை­யி­லுள்ள இளைஞர்,யுவ­தி­க­ளுக்கு அறி­வுட்டும் இந்த முயற்­சியை சமூகப் பொறுப்புணர்வாகவே நாம் கருதுகின்றோம், என்று குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!