லொஸ்லியா, கவின்: சாத்தியப்படுமா இவ்வார பிக்பொஸ் வெளியேற்றம்?

0 1,709

– ஏ.எம். சாஜித் அஹமட் –

சென்ற வாரம் பிக்பொஸ் வீட்டை விட்டு யாரும் வெளியேறவில்லை. வீட் டில் இருப்பவர்களுக்குத் தெரியாமல் கமல் ஆடிய நாடகம் நன்றாகவே பலித் திருந்தது.

ஆனால் இந்­த­வாரம் யாரோ ஒருவர் வெளியே­றித்தான் ஆக வேண்­டு­மென கமல் கண்­டிப்­பாக கூறி­விட்டார். கவின், லொஸ்­லியா, ஷெரின், சேரன், சாண்டி ஆகியோர் இவ்­வாரம் நோமி­னேஷன் ஆகி­யி­ருக்­கி­றார்கள்.

இம்­முறை கொன்­பெசன் அறைக்குச் சென்று ஒரு­வரை ஒருவர் நோமி­னேஷன் செய்­யாமல், நேர­டி­யாக செய்யும் படி பிக்பொஸ் ஆணை­யிட்டார்.

அனை­வரும் வெட­வெ­டத்துப் போனார்கள். நண்­பர்­க­ளுக்கு விட்டுக் கொடுத்து விளை­யாட வேண்டும் என ஒரு அணியும், இங்கு விட்டுக் கொடுப்­பிற்கு இட­மில்லை என ஒரு அணியும் இரண்­டாகப் பிரிந்து பெரும் தர்க்­கங்­களில் ஈடு­பட்­டனர்.

சேரனும், ஷெரீனும் ஏலவே சினி­மாத்­து­றையில் நன்கு பிர­பல்­ய­மா­கி­யி­ருப்­பதால், அவர்கள் இரு­வ­ரையும் நோமினேட் செய்தார் கவின். இதனால் ஷெரி­னுக்கும் கவி­னுக்கும் இடையே மோதல் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. நீண்ட நேரங்கள் வனி­தா­வுடன், கவின் மோதிக் கொண்­டி­ருந்தார்.

 

பிக்பொஸ் வீட்டில் அன்­பிற்கும், பாசத்­திற்கும், விட்டுக் கொடுப்­பிற்கும் இட­மில்லை எனவும், இது போட்­டிக்­கான களம் என்­பதால் விளை­யா­டு­வ­தற்கு மட்­டுமே அனுப்­பப்­பட்­டி­ருக்­கிறோம் என்­ப­தையும் ஓங்­கிய பெரும் சப்­தத்­துடன் எதி­ரொ­லித்தார் வனிதா.

அவ்­வா­றல்ல, உணர்­வு­க­ளுக்கே நான் முக்­கி­யத்­துவம் கொடுப்பேன், என் நண்­பர்­க­ளுக்­காக விட்டுக் கொடுப்பேன், இதுதான் நான் என்­ப­தாக கவினின் பேச்­சுக்கள் அமைந்­தன.  பிக்பொஸ் வீட்டின் உள்ளே ஓய்­வில்­லாத பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன.

வனிதா, சேரன், ஷெரீன் ஒரு அணி­யாகப் பிரிந்­தி­ருக்­கின்­றனர். கவின், சாண்டி, லொஸ்­லியா, முகின், தர்ஷன் ஒரு அணி­யாகப் பிரிந்­தி­ருக்­கின்­றனர். ஷெரீன் எல்லாப் பக்­கமும் சில நேரங்­களில் நிற்­கிறார். கவினின் நோமி­னே­ஷ­னுக்குப் பிற­குதான் வனி­தா­வுடன் இணைந்து கொண்டார். சில நேரங்­களில் வனி­தா­வினை கண்­டிக்­கவும் செய்­கிறார்.

தலை­யணை செய்யும் டாஸ்க்கில் லொஸ்­லி­யாவும், வனி­தாவும் நடு­வர்­க­ளாக செயற்­பட்­டனர்.

வனிதா அணிக்கு லொஸ்­லியா நடு­வ­ரா­கவும், லொஸ்­லியா அணிக்கு வனிதா நடு­வ­ரா­கவும் பிக்­பொ­ஸினால் அமர்த்­தப்­பட்­டனர்.

வனிதா அணி­யினர் செய்த ஏரா­ள­மான தலை­ய­ணை­களை லொஸ்­லியா கழித்து விட்டார்.

இதனால் வனி­தா­விற்கும் லொஸ்­லி­யா­விற்­கு­மி­டையே பெரும் போர் ஆரம்­பித்து விட்­டது.இடையில் கவின் வந்து நியாயம் சொல்ல, வனிதா எகிறிக் குதித்து விட்டார். கவின், லொஸ்­லியா பழைய கதை­களை ஆராய்ந்து வார்த்­தை­களை தெறிக்க விட்டார். பதி­லுக்கு லொஸ்­லி­யாவும் தர்க்­கத்தில் ஈடு­பட ரண­க­ள­மாகிப் போனது பிக்பொஸ் வீடு.

பிக்பொஸ் வீட்­டை­விட்டு வெளியே சென்ற அபி­ராமி, சாக் ஷி, மோகன் வைத்யா இம் மூன்று பேரும் மீண்டும் விருந்­தா­ளி­க­ளாக பிக்பொஸ் வீட்டின் உள்ளே வந்­தி­ருக்­கி­றார்கள்.

அபி­ராமி மாத்­திரம் எல்­லோ­ரு­டனும் சக­ஜ­மாகப் பழக, சாக் ஷியும், மோகன் வைத்­தி­யாவும் தங்­க­ளது லீலை­களைத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர்.

சா­க் ஷிக்கும் கவி­னுக்கும் இடையே தர்க்­கங்­களின் ஆரம்பம் தொடங்­கி­விட்­டது. வனி­தாவும், ஷெரீனும் கவினைப் பற்றி சா­க்ஷி­யிடம் புட்டுப் புட்டு வைக்க கோபத்தின் உச்­சத்தில் நிற்­கிறார் சாக் ஷி. சேர­னிடம் மோகன் வைத்­தியா பல கதை­களை கூறி­விட்டார்.

லொஸ்­லியா சேரன் மீது வைத்­தி­ருப்­பது உண்­மை­யான அன்­பில்லை எனவும், அப்பா என்று அழைப்­பது அனைத்தும் நாடகம் எனவும், லொஸ்­லியா சேரனை ஏமாற்றி விட்டார் எனும்­ப­டி­யாக பற்ற வைக்­கப்­ப­டு­கி­றது நெருப்பு. இவ்­வாறு ஒருத்­தரை ஒருத்தர் பழி தீர்க்கும் பட­லமே பிக்பொஸ் வீட்டில் நடந்­தே­றி­வ­ரு­கி­றது.

எல்­லா­வற்­றுக்கும் விளக்கம் சொல்­கிறார் வனிதா. இதனை மற்­ற­வர்­க­ளுக்கு தாங்கிக் கொள்ள முடி­யாமல் உள்­ளது. அனை­வரும் வனி­தா­வினை எதிர்க்­கின்­றனர். இதனை வாய்ப்­பாக வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் அவர்­களைச் சீண்­டு­வதில் குறி­யாக இருக்­கிறார் வனிதா.

இவ்­வாரம் பாரிய ஆரவா­ரத்­துடன் கமல் வருவார். பிக்பொஸ் வீட்டை விட்டு யார் வெளியே­று­வார்கள் என்­பது பெருத்த கேள்­வி­யா­க­வி­ருக்­கி­றது. நாட்கள் நெருங்க நெருங்க ஆட்கள் குறைந்து கொண்டே போகி­றார்கள்.

இம்­முறை ஷெரீன் வெளியே­று­வ­தற்­கான வாய்ப்­புகள் குறை­வா­கவே இருக்­கின்­றன. கவின், லொஸ்­லியா ஊடல் அதி­க­மாக பிரஸ்­தா­பிக்­கப்­ப­டு­வதால் இரு­வரில் ஒரு­வரின் வெளியேற்றம் சாத்­தி­யப்­ப­டுமா என்­ப­தினை சந்­தேகக் கண் கொண்­டுதான் பார்க்க வேண்டும். இதற்­கான வாய்ப்­புகள் அதிகம் உள்­ளன.

தர்ஷன் வெளியே­று­வ­தற்­கான வாய்ப்­புகள் இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. வெளியே­று­வ­தற்­கான தகுந்த கார­ணங்­க­ளுடன் லொஸ்­லி­யாவும், கவினும் மாத்­தி­ரமே இருக்­கி­றார்கள்.

லொஸ்­லியா வெளியேற்­றப்­பட்டால் அதற்கு கவின்தான் காரணம் எனவும், கவின் வெளியேற்­றப்­பட்டால் அதற்கு லொஸ்­லி­யாதான் காரணம் எனவும் வீட்டில் இருப்­ப­வர்கள் சொல்­லத்தான் போகி­றார்கள்.

இரண்டு பேரில் யார் வெளியே சென்­றாலும் பிரச்­சி­னை­களின் உரு­வாக்கம் இருக்­கத்தான் போகி­றது. இர­க­சிய அறைக்கு உரிய சந்­தர்ப்பம் பிக்பொஸ் வீட்டின் உள்ளே இப்­போ­துதான் வரு­கி­றது.

இவ்­வா­ரத்தின் வெளியேற்றும் பட­லத்­தினை கமல் சுவா­ரஷ்­ய­மாகத் தொடங்­குவார். பல­ரிடம் பல கேள்­வி­களைக் கேட்பார். திக்­கு­முக்­காட வைப்பார்.

மிக இறுதிக்கட்டத்தில் பிக்பொஸ் வீடு சூடு பிடித்திருக்கிறது. இவ்வாரத்தின் வெளியேற்றம் யார்? என்பதுதான் மிக வியப்பான கேள்வியாக உள்ளது. அடுத்த கட்டத்தினை நோக்கி பிக்பொஸ் வீடு நகர்த்தப்படப் போகிறது.

எஞ்சியிருப்பவர் யார்? அவருக்கான நிலைப்பாடு பிக் பொஸ் வீட்டில் எப்படிப்பட்டது? என்பதினை புரிந்து கொள்ள கமலின் வரு கைக்காக காத்திருப்போம். அவர்தான் பிக் பொஸ் வீட்டின் சகுனி.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!