பிலிப்பைன்ஸ் தேவாலயம் மீதான குண்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் இந்தோனேஷியத் தம்பதியினர்! -மரபணு சோதனையில் உறுதி!

0 680

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியிd;  சூலு மாகாணத்தின் தலைநகர் ஜோலோவில், கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

                                           தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தேவாலயம்

ஜமா அன்ஷரட் தவுலா (Jamaah Ansharut Daulah ) என்ற உள்நாட்டு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இந்தோனேஷியத் தம்பதியினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளமை மரணபணுச் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்ததுடன் 102 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் தம்பதியர், ரூல்லி ரியான் ஜேக்கே, அவரது மனைவி உல்பா ஹண்டயானி சலே ஆவர்.

இவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கி இருந்ததும், 2017ஆம் ஆண்டு அவர்கள் துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்துளள்து.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!