சந்திரனின் தரையில் விக்ரம் லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ

0 2,763

இந்தியாவினால்; சந்திரயான் 2 விண்கலத்தின் மூலம் செலுத்தப்பட்ட விக்ரம் எனும் லேண்டர் கலம் சந்திரனின் தரையில் இருக்கும் இடம் கண்டறியப்பட்டடுள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. தலைவர் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து நேற்று அதிகாலை சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரம் லேண்டர், சந்திரனிலிருந்து 2.1 கிலோமீற்றர் உயரத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இஸ்ரோவுடனான தொடர்பை இழந்தது.

இந்நிலையில், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் தலைவர் கே. சிவன்


இது தொடர்பாக இஸ்ரோவின் தலைவர் கே. சிவன் கூறுகையில், சந்திரயான் 2 விண்கலத்தின் மூலம், விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், விக்ரம் லேண்டருடன் இன்னும் இஸ்ரோ தொடர்பை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

விக்ரம் லேண்­ட­ருடன் தொடர்பை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு விஞ்­ஞா­னிகள் எதிர்­வரும் 14 நாட்கள் தொடர்ச்­சி­யாக முயற்­சிப்பர் எனவும் கே.சிவன் தெரி­வித்தார்.  மேற்­ப­ரப்பில் தரை இறங்­கி­யது. இதை­ய­டுத்து, சுமார் 35 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்ல தொடங்­கி­யது.

இந்­தி­யாவின் சார்பில் நிலவின் தென்­து­ரு­வத்தை ஆய்வு செய்ய ‘சந்­தி­ரயான்-2’ திட்டம் 978 கோடி இந்­திய ரூபா (சுமார் 2447 கோடி இலங்கை ரூபா)) செலவில் மேற்­கொள்­ளப்­பட்­டது.  பிரக்யான் எனும் ஆய்வு ஊர்தி, அதைத் தாங்­கிய விக்ரம் எனும் லேண்டர் கலம் சகிதம் சந்­தி­ரயான் 2 விண்­கலம் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி விண்ணில் ஏவப்­பட்­டது.

கடந்த மாதம் 20 ஆம் திகதி ‘சந்­தி­ரயான்-2’ விண்­கலம் நிலவின் சுற்று வட்­டப்­பா­தையை அடைந்­தது. அதன்­பி­றகு படிப்­ப­டி­யாக 5 முறை ‘சந்­தி­ரயான்-2′ விண்­க­லத்தின் நிலவின் சுற்று வட்­டப்­பாதை உயர்த்­தப்­பட்­டது. கடந்த 2 ஆம் திகதி சந்­தி­ரயான்-2’ விண்­க­லத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனி­யாக பிரிந்து நிலவின் மேற்­ப­ரப்பை நோக்கி பய­ணிக்கத் தொடங்­கி­யது.

பின்னர் 2 முறை உள் உந்து விசையை பயன்­ப­டுத்தி விக்ரம் லேண்­டரின் வேகம் குறைக்­கப்­பட்டு, அதன் சுற்று வட்­டப்­பாதை மாற்றி அமைக்­கப்­பட்­டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் சந்­தி­ரனை நெருங்­கி­யது. இந்­நி­லையில் ‘சந்­தி­ரயான்- 2’ விண்­கல திட்­டத்தின் முக்­கிய மற்றும் சவா­லான கட்டம் நேற்று முன்தினம் சனிக்­கி­ழமை அதி­கா­லையில் ஆரம்­ப­மா­கி­யது.

சந்­தி­ரயான்-2 விண்­க­லத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்­கிய நிலையில் அதி­லி­ருந்து சிக்னல் எதுவும் வர­வில்லை. சரி­யாக 2.1 கிலோ­மீற்றர் தூரத்தில் இருந்­த­போது லேண்டர் தரைக்­கட்­டுப்­பாட்டு தளத்­து­ட­னான தொடர்பு துண்­டிக்­கப்­பட்­டது.

விக்ரம் லேண்டர் சந்­தி­ரனில் தரை­யி­றங்கி, சில மணித்­தி­யா­லங்­களில் அதி­லி­ருந்து பிரக்யான் எனும் ஆய்வு ஊர்தி வெளி­வந்து சந்­தி­ரனின் தரையை ஆய்வு செய்ய திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

1971 ஆம் ஆண்டு மறைந்த, இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் தந்தை கலாநிதி விக்ரம் எஸ். சாராபாயின் நினைவாக மேற்படி லேண்டர் கலத்துக்கு விக்ரம் என பெயரிடப்பட்டது. இந்த லேண்டரின் ஆயுள் ஒரு சந்திரநாள் ஆகும். இது பூமியின் ஏறத்தாழ 14 நாட்களுக்குச் சமமானது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!