வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 09: 1945 -சீனாவிடம் ஜப்பான் சரணடைந்தது

0 126

1493 : ஒட்டோமான் பேரரசின் படையெடுப்புக்கு எதிரான குரோஷியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

1945: சீனாவிடம் ஜப்பான் சரணடைந்தது

1513: ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் ஸ்கொட்லாந்தின் நான்காம் ஜேம்ஸ் மன்னர் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

1543 : மேரி ஸ்டுவேர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது ஸ்கொட்லாந்தின் அரசியாக முடி சூடினார்.

1791 : அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வொஷிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டன், டி.சி. எனப் பெயரிடப்பட்டது.

1799 : வீர பாண்டிய கட்டபொம்மன் ஆட்சிசெய்த பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.

1839 : அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பரவிய பெரும் தீயில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்தன.

1839 : ஜோன் ஹேர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்.

1922 : கிரேக்க,  துருக்கி போர் துருக்கியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.

1924 : ஹவாய், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

1939 : இரண்டாம் உலகப் போர்: போலந்தின் குரோவ் நகர் மீது நாசி ஜெர்மனியர் குண்டுகளை வீசித் தாக்கினர்.

1942 : இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய விமானம் அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் குண்டு வீசியது.

1944 : பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத் சார்பு அரசு பதவியேற்றது.

1945 : இரண்டாவது சீன, ஜப்பான் போரில் சீனாவிடம் ஜப்பான் சரணடைந்தது.

1948: கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வடகொரியா) ஸ்தாபிக்கப்பட்டதை கிம் இல் சுங் பிரகடனப்படுத்தினார்.

1954 : அல்ஜீரியாவில் இடம்பெற்ற பூகம்பத்தில் 1500 பேர் கொல்லப்பட்டனர்.

1965 : அமெரிக்காவில் சூறாவளியினால் 76 பேர் கொல்லப்பட்டனர்.

1970 : பிரித்தானிய விமானமொன்று பாலஸ்தீன கிளர்சசியாளர்களால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

2018: ஆசிய கிண்ண வலைபந்தாட்டத்தில் இலங்கை சம்பியனாகியது.

1990 : மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 184 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1991 : சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிவதாக தஜிகிஸ்தான் பிரகடனம் செய்தது.

1993 : இஸ்ரேலை தனிநாடாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் அங்கீகரித்தது.

2004 : இந்தோனேஷியா, ஜகார்த்தாவில் அவூஸ்திரேலிய தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

2006 : அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா வெற்றி பெற்றார்.

2009: அரேபிய தீபகற்பத்தின் முதலாவது மாநகர ரயில்வே சேவையான துபாய் மெட்ரோ சேவை ஆரம்பிக்கப்பட்டது.

2012: ஈராக்கில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்களில் 108 பேர் பலியானதுடன் 351 பேர் காயமடைந்தனர்.

2015: 2 ஆம் எலிஸபெத் அரசி, பிரிட்டனில் மிக நீண்ட காலம் ஆட்சிபுரிந்தவரானார்.

2018: சிங்கப்பூரில் நடைபெற்ற 11 ஆவது ஆசிய கிண்ண வலைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இலங்கை சம்பியனாகியது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!