சந்திரயான் 2 திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு

You have inspired us, will explore solar system together, says NASA to ISRO

0 170

இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­ன­மான இஸ்­ரோவின் சந்­தி­ரயான் 2 திட்­டத்­துக்கு அமெ­ரிக்க விண்­வெளி ஆராய்ச்சி நிறு­வ­ன­மான நாசா பாராட்டுத் தெரி­வித்­துள்­ளது.

சந்­தி­ரயான் 2 திட்­டத்தில் சந்­தி­ரனில் தரை­யி­றங்­க­வி­ருந்த விக்ரம் எனும் லேண்­ட­ரு­ட­னான தொடர்பு இறுதி நேரத்தில் துண்­டிக்­கப்­பட்­ட­தாக இஸ்ரோ அறி­வித்த பின்னர் நாசா நிறு­வனம் இப்­பா­ராட்டைத் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக நாசா தனது டுவிட்டர் பக்­கத்தில் வெளி­யிட்ட பதி­வொன்றில்,”விண்­வெளி கடி­ன­மா­னது. சுந்­தி­ரனின் தென் துரு­வத்தில் சொப்ட்­லேண்டிங் செய்­வ­தற்­கான இஸ்­ரோவின் சந்­தி­ரயான் 2 திட்­டத்தை நாம் பாராட்­டு­கின்றோம். உங்கள் பய­ணத்தின் மூலம் நீங்கள் எமக்கு உத்­வே­க­ம­ளித்­துள்­ளீர்கள். எமது சூரியத் தொகு­தி­யை­ இ­ணைந்து ஆய்வு செய்­வ­தற்­கான எதிர்காலத்தில் வாய்ப்புகளை நாம் எதிர்பார்க்கிறோம்”எனத் தெரிவித்துள்ளது. 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!