பிரித்தானிய அமைச்சர் ஆம்பர் ரூட் இராஜினாமா

0 21

பிரித்­தா­னிய தொழி­லாளர் மற்றும் ஓய்­வூ­தி­ய­தா­ரர்கள் நலத்­துறை அமைச்சர் ஆம்பர் ரூட் இன்று  இரா­ஜி­னாமா செய்­துள்ளார்.

ஐரோப்­பிய யூனி­யனில் இருந்து விலகும் பிரெக்ஸிட் நடை­மு­றை­களில் பிரித்­தா­னிய பிர­தமர் போரிஸ் ஜோன்­சனின் தீர்­மா­னத்­தையும் ஆளுங்­கட்­சியின் 21 எம்.பி.க்கள் பதவி நீக்­கத்­தையும் எதிர்த்து அமைச்சர் ஆம்பர் ரூட் இராஜி­னா­மா செய்தார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இருந்து பிரிட்டன் வெளி­யே­று­வதை மேலும் தாம­தப்­ப­டுத்தக் கோரும் சட்­ட­மூலம் தொடர்­பான வாக்­கெ­டுப்பில் அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வாக 327 வாக்­கு­களும், எதி­ராக 299 வாக்­கு­களும் கிடைத்­தன.

இதன்­மூலம், ஒப்­பந்தம் இல்­லாமல் வெளி­யே­று­வ­தற்கு பிரிட்டன் அரசு எடுத்த முயற்­சியை, சமீ­பத்தில் நீக்­கப்­பட்ட கன்­சர்­வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்­கட்சி எம்.பி.க்கள் இணைந்து முதல் கட்­டத்தில் தோற்­க­டித்­தனர்.

இந்த சட்­ட­மூ­லத்­துக்கு பிரித்­தா­னிய நாடா­ளு­மன்ற மேல்­ச­பையும் ஒப்­புதல் அளித்­துள்­ளது. எனவே, பிரெக்ஸிட் ஒப்­பந்­தத்தை நிறை­வேற்ற பிர­தமர் போரிஸ் ஜோன்சன் மேலும் 3 மாதம் அவ­காசம் கேட்­க­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டது.

இதேபோல் அடுத்த வாரத்­துக்குள் நாடாளு­மன்­றத்தை கலைத்­து­விட்டு முன்­கூட்­டியே தேர்­தலை நடத்த வேண்டும் என பிர­தமர் போரிஸ் ஜோன்சன் கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்த எம்.பி.க்கள் அவ­ரது கோரிக்­கையை நிரா­க­ரித்­தனர்.

இந்­நி­லையில், பிரிட்டன் நாடா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைக்கும் பிர­தமர் போரிஸ் ஜோன்சன் முடிவை எதிர்த்து லண்டன் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்ட வழக்கு சமீ­பத்தில் தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.

இதற்­கி­டையில், ஆளும் கன்­சர்­வேடிவ் கட்­சியை சேர்ந்த 21 எம்.பி.க்கள் சமீ­பத்தில் பதவி நீக்கம் செய்­யப்­பட்­ட­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து தொழி­லாளர் மற்றும் ஓய்­வூ­தி­ய­தா­ரர்கள் நலத்­துறை மந்­திரி ஆம்பர் ரூட் தனது பத­வியை இராஜி­னாமா செய்­துள்ளார்.

மந்­திரி பத­வி­யுடன் சேர்த்து பாரா­ளு­மன்ற ஆளும்­கட்சி கொறடா பத­வியில் இருந்தும் வில­கு­வ­தாக அறி­வித்­துள்ள ஆம்பர் ருட், ‘21 எம்.பி.க்கள் பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஜனநாயகத்தின் மீதும் அடிப்படை நாகரிகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்’ என தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!