ஹீரோவானார் விஜய் டி.வி ராமர்

0 79

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் கொமடி நிகழ்ச்சி ‘கலக்க போவது யாரு’. இந்த நிகழ்ச்சி தமிழ் சினிமாவுக்கு சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த் போன்ற ஹீரோக்களை கொடுத்திருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்து வருகிறார் ராமர்.

‘கலக்கப்போவது யாரு‘ நிகழ்ச்சியின் தற்போதைய ஸ்டார் ராமர் தான்.

உலகம் முழுவதும் அவரது கொமடிக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மதுரை அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்து, நாடகத்தில் கொமடி செய்து, அதன் மூலமாக தொலைக்காட்சிக்குள் வந்தார்.

சமீபகாலமாக சினிமாவில் கொமடி கெரக்டர்களில் நடித்து வந்த ராமர், இப்போது ஹீரோவாகவும் ஆகிவிட்டார்.

அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி நடிக்கிறார்.

படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. தற்போது பூஜையுடன் படத்தின் பணிகள் துவங்கியது.

சூப்பர் டாக்கீஸ், அவதார் புரொடக் ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

குறும்பட இயக்குநர் மணி ராம் இயக்குகிறார். ஜபீஸ் கே.கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், விஷ்ணு விஜய் இசை அமைக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் மணிராம் கூறியதாவது:  இது கொமடி கலந்த திரில்லர் படம், ஒவ்வொரு மனிதனும் தன்னை மறைத்துக் கொள்ளும் பல்வேறு முகமூடிகளை அணிந்திருக்கிறான். அந்த முகமூடிகளுக்கு பின்னால் இருக்கும் முகத்தை காமெடியாக சொல்லுகிற த்ரில்லர் படம்.

முகமூடி கலைந்தால், அதன் எதிர்வினை மற்றும் பதில்களையும் மிகவும் சுவாரஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் நம் கண்முன் காட்டப்போகும் படம். மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தெரிவு செய்து வருகிறோம், வரும் ஒக்டோபர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!