வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 10: 2003-சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கத்தியால் குத்தப்பட்டார்

0 221

1547: இங்கிலாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையிலான கடைசி முழு அளவிலான இராணுவச் சமரான “பிங்கி செலேஹ் சமர் நடைபெற்றது.

1759 : இந்தியாவின் பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் மூண்டது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.

2003: சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கத்தியால் குத்தப்பட்டார்.

1840 : ஓட்டோமான், மற்றும் பிரித்தானியப் படைகள் லெபனானின் பெய்ரூத் நகர் மீது தாக்குதல் தொடுத்தன.

1846 : எலியாஸ் ஹோவ், தையல் இயந்திரத்துக்கான காப்புரிமையைப் பெற்றார்.

1858 : 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.

1898 : ஆஸ்திரியாவின் அரசி எலிஸபெத் கொலை செய்யப்பட்டார்.

1931 : மத்திய அமெரிக்க நாடான பெலீஸில், சூறாவளியினால் 1,500 பேர் கொல்லப்பட்டனர்.

1939 : இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனிக்கு எதிராக கனடா போர்ப் பிரகடனம் செய்தது.

1939: பிரிட்டனின் கடற்படைக் கப்பலான எச்.எம்.எஸ். ஒக்ஸ்லீயை எதிரிக்கப்பல் எனக் கருதிய பிரித்தானிய நீர்மூழ்கியொன்று தாக்கி மூழ்கடித்தது.

1943 ஜேர்மனியப் படையினர் ரோம் நகரினுள் நுழைந்தனர்.

1960: ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் மரதன் போட்டியில் எத்தியோப்பிய வீரர் அபேபே பிகிலா வெறுங்காலுடன் ஓடி தங்கப்பதக்கம் வென்றார்.

1961: இத்தாலிய குரோன் ப்றீ போட்டியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன் போர்மியூலா வன் வீரர் வூல்காங் வொன் ட்ரிப்ஸஷும் 13 பார்வையாளர்களும் உயிரிழந்தனர்.

1974 : போர்த்துகலிடம் இருந்து கினியா பிசாவ் சுதந்திரம் பெற்றது.

1976 : பிரித்தானிய விமானமொன்று யூகோஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.

1972: ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் அமெரிக்காவை சோவியத் ய+னியன் தோற்கடித்தது. ஒலிம்பிக் கூடைப்பந்தாட்டத்தில் அமெரிக்க அணி தோல்வியடைந்தமை இதுவே முதல் தடவையாகும்.

1977: பிரான்ஸில் சித்திரவதை, கொலை குற்றங்களின் பேரில் ஹமிடா ஜேன்டோபி என்பவருக்கு சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2000 : மட்டக்களப்பு  முன்னாள் நகர மேயர் செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.

2003: சுவீடன் வெளிவிவகார அமைச்சர் அனா லிந்த்இ வர்த்தக நிலையமொன்றில் வைத்து கத்தியால் குத்தப்பட்டு அடுத்தநாள் காலமானார்.

2007: 1999 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் வெளிநாடுகளில் தங்கியிருந்தபின் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!