மாலிங்க, திமுத், மெத்யூஸ் உட்பட 10 வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுலாவிலிருந்து விலகல்

10 prominent Sri Lanka cricketers refused to travel to Pakistan for the limited-overs tour.

0 761

பாகிஸ்தானில் இம்மாதம் முதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது 20 போட்டிகளில் பங்குபற்றாமல் விலகியிருப்பதற்கு இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் 20 பேர் தீர்மானித்துள்ளனர் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்தள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் ஒக்டோபர் 9 ஆம் திகதிவரை 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் 3 சர்வதேச இருபது20 போட்டிகளிலும் பாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போட்டிகளில் பங்குபற்றுவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரம் வீரர்களுக்கு வழங்கப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முக்கிய 10 வீரர்கள் இப்போட்டிகளிலிருந்து விலகியிருப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் திமுத் கருணாரட்ன, இருபது20 போட்டிகளுக்கான அணித்தலைவர் லசித் மாலிங்க, ஏஞ்சலோ மெத்யூஸ், நிரோஷன் திக்வெல்ல. குசல் ஜனித் பெரேரா, தனஞ்செய டி சில்வா, திசர பெரேரா, அகில தனஞ்செய, சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் ஆகிய வீர்கள் போடடி;களலிருந்து விலகியிருப்பதற்குத் தீர்மானித்துள்ளனர் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!