அமெரிக்காவில் 656 அடி நீளமான கப்பல் கவிழ்ந்தது: கடும் போராட்டத்தின்பின் ஊழியர்கள் மீட்பு

Cargo Ship 'Golder Ray' Overturns Near Georgia Port

0 1,168

அமெரிக்காவில் பாரிய சரக்குக் கப்பலொன்று கவிழ்ந்த நிலையில், அதிலிருந்து ஊழியர்கள் கடும் போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டனர்.

“கோல்டன் றே” எனும் 656 அடி நீளமான இந்த சரக்குக் கப்பல் அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலததின் ப்ரன்ஸ்விக் கரையோரத்தில் உள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை கவிழ்ந்தது.

இக்கப்பலில் 23 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் 19 பேர் சில மணித்தியாலங்களுக்குள் கரையோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டனர். எனினும் 4 பேர் ஒரு நாள் முழுவதும் கப்பலுக்குள் சிக்கியிருந்தனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கப்பலில் துவாரமொன்றை ஏற்படுத்தி இவர்கள் மீட்கப்பட்டனர் என அறிவிக்கப்பட்டள்ளது.

இக்கப்பல் கவிழ்ந்தமைக்கான காரணம் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!