சந்திரயான்-2 பிரக்யான் ரோவர் வாகனத்தின் சோதனை ஓட்டத்துக்கு மண் அளித்த கிராம மக்கள் கவலை

0 40

சந்­தி­ரயான்- 2 விண்­கலத் திட்­டத்தில் பின்­ன­டைவு ஏற்­பட்­டதை தொடர்ந்து, அதன் ரோவர் வாக­னத்தின் சோதனை ஓட்­டத்­திற்கு மண் அளித்த கிராம மக்கள் சோகம் அடைந்து உள்­ளனர்.

தமி­ழ­கத்தின் நாமக்கல் மாவட்டம் பர­மத்­தி­வே­லூ­ருக்கும், திருச்­செங்­கோட்­டுக்கும் இடையே உள்­ளது சித்­தம்­பூண்டி மற்றும் குன்­ன­மலை கிரா­மங்கள்.

இந்த கிரா­மங்­களில் ஆய்வு செய்த சேலம் பெரியார் பல்­க­லைக்­க­ழக புவி­யியல் துறை­யினர், நிலவின் மேற்­ப­ரப்பில் உள்ள அனார்த்­தசைட் மண், பாறை வகைகள் (Anthracite rock) இந்த கிரா­மங்­களில் இருப்­பதை கண்­ட­றிந்­தனர்.

இதை­ய­டுத்து அவர்கள் கொடுத்த தக­வலின் பேரில் இஸ்ரோ விஞ்­ஞா­னிகள் சித்­தம்­பூண்டி மற்றும் குன்­ன­மலை கிரா­மங்­களில் ஆய்வு செய்­தனர்.

பின்னர் இந்த இரு கிரா­மங்­களில் இருந்தும் சந்­தி­ரயான்-–2 விண்­க­லத்தின் ரோவர் வாக­னத்தின் சோதனை ஓட்­டத்­துக்­காக சுமார் 50 தொன் மண்ணை எடுத்துச் சென்­றனர்.

பின்­னர், பெங்­களூ­ரி­லுள்ள இஸ்­ரோவில், சந்­தி­ரயான் – 2 திட்­டத்தின் பிரக்யான் எனும் ரோவர் வாக­னத்தின் ஓடு­திறன் பரி­சோ­தனை செய்­யப்­பட்­டது.

தற்­போது சந்­தி­ரயான்–2 விண்­கல திட்டம் சற்று பின்­ன­டைவை சந்­தித்து இருப்­பதால் ரோவர் வாகனம் சோதனை ஓட்­டத்­துக்கு மண் அளித்த கிராம மக்கள் மத்­தியில் சோகம் காணப்­ப­டு­கி­றது. இது குறித்து அப்­ப­கு­தியை சேர்ந்த பொது மக்கள் சிலர் கூறி­ய­தா­வது:

சந்திரயான் 2 ரோவர் பிரக்யான். மண் எடுக்கப்பட்ட சித்தம்பூண்டியிலுள்ள பிரதேசம்

 

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்பு எங்­க­ளது கிரா­மத்தில் இருந்து அதி­கா­ரிகள் மண் எடுத்துச் சென்­றனர். அப்­போது எங்­க­ளுக்கு எதற்­காக மண் எடுக்­கப்­ப­டு­கி­றது என்­பது தெரி­யாது. ஆனால், பின்னர் நில­வுக்கு அனுப்­பப்­படும் சந்­தி­ரயான் – 2 விண்­க­லத்தின் ரோவர் வாகன சோதனை ஓட்­டத்­துக்­காக மண் எடுக்­கப்­பட்­டது தெரி­ய­வந்­தது.

நிலவில் உள்ள மண்ணும், எங்கள் பகு­தியில் உள்ள மண்ணும் ஒரே வகையை சேர்ந்­தது என்­பது எங்­க­ளுக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ஆனால். தற்போது விக்ரம் லேண்டர், நிலவில் இறங்குவதற்கு முன்பு தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பது எங்களுக்கு கவலை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!