காஷ்மீரின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை; ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பசெலெட் தெரிவிப்பு

0 35

காஷ்­மீரின் நிலைமை குறித்து தான் மிகுந்த கவ­லை­ய­டை­வ­தாக ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிஷெல் பசெலெட்  இன்று  தெரி­வித்­துள்ளார்.

சுவிட்­ஸர்­லாந்தின் ஜெனீ­வா நகரில் இன்று, ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் ஆரம்ப உரை­யாற்­று­கையில் மிஷெல் பசெலெட் இவ்­வாறு தெரி­வி­த்தார்.

‘இந்­திய அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களால் காஷ்மீர் மக்­களின் மனித உரி­மை­களில் ஏற்­படும் தாக்­கங்கள் குறித்து நான் மிகுந்த கவ­லை­ய­டை­கிறேன்’ என அவர் கூறினார்.

காஷ்­மீரில் இணைய மற்றும் தொலைத்­தொ­டர்பு மீதான கட்­டுப்­பா­டுகள், உள்ளூர் அர­சியல் தலை­வர்­களும் செயற்­பாட்­டா­ளர்­களும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை குறித்தும் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிஷெல் பசெலெட் சுட்­டிக்­காட்­டினார்.

கடந்த மாதம் 5 ஆம் திகதி இந்­திய மத்­திய அரசு, காஷ்மீர் சிறப்பு சட்ட அந்­தஸ்தை இரத்து செய்­ததுடன், அம்­மா­நி­லத்தை இரண்டு யூனியன் பிர­தே­சங்­க­ளாக பிரித்­தது. அதைத் தொடர்ந்து அங்கு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வதை தடுப்­ப­தற்­காக முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக பாது­காப்புப் படை­யினர் குவிக்­கப்­பட்­டனர்.

அத்­துடன் தொலைத்­தொ­டர்பு சேவை­களும் துண்­டிக்­கப்­பட்­டன. காஷ்­மீரின் முன்னாள் முத­ல­மைச்­சர்கள் உட்­பட அர­சியல் தலை­வர்கள் வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்­டனர்.

இந்­நி­லை­யில், காஷ்மீர் நிலை­மைகள் குறித்து கவலை தெரி­வித்­துள்ள ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிஷெல் பசெலெட், காஷ்மீர் மக்­களின் எதிர்­கா­லத்தில் தாக்கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய விடய­ங்கள் தொடர்­பான தீர்­மானம் மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­களில், அம்­மக்­களும் கலந்­தா­லோ­சிக்­கப்­ப­டு­வ­துடன், அவர்­களும் இச்­செ­யன்­மு­றை­களில் பங்­கு­பற்­று­வது அவ­சியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!