கவர்ச்சிக்கு தயாரான நிவேதா பெத்துராஜ்

0 166

மதுரையில் பிறந்த பக்கா தமிழ்நாட்டு பொண்ணு, நடிகை நிவேதா பெத்துராஜ். துபாயில் அழகி பட்டம் வென்று, ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், தற்போது ‘பொன் மாணிக்கவேல்’, ‘ஜெகஜால கில்லாடி’, ‘சங்கத்தமிழன்’ படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கிலும் நடிக்க தொடங்கி உள்ளார். அங்கு கிளாமருக்கு மாறியிருக்கும் நிவேதா, அளித்த பேட்டி..

‘சங்கத்தமிழன்’ படம் பற்றி சொல்லுங்க?
விஜய் சேதுபதி உடன் ‘சங்கத்தமிழன்’ படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

இவரிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம். எவ்வளவு கஷ்டமான காட்சிகள் இருந்தாலும் அதை முயற்சி செய்து சுலபமாக நடித்துவிடுவார்.மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவார்.

படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
நான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு செய்தி இருக்கணும் என்று நினைப்பேன். அப்படியான படங்களை தான் பார்த்து பார்த்து நடிக்கிறேன்.

திடீர் கிளாமர் ஏன்?
தமிழில் எனக்கு கவர்ச்சி செட்டாகாது, குடும்பபாங்கான பாத்திரங்கள் தான் சரி வரும். தெலுங்கில் அப்படி இல்லை. தற்போது, நான்காவது தெலுங்கு படமாக அல்லு அர்ஜூன் உடன் நடிக்கிறேன். அந்தப்படத்தில் எனது கெரக்டருக்கு கிளாமர் தேவை உள்ளதால் மறுக்க முடியவில்லை.

தமிழ் – தெலுங்கு எப்படி பார்க்கிறீங்க?
எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறேன்.

ஆனால் தெலுங்கில் இரண்டு ஹிட் படங்கள் கொடுத்ததால் அங்கு எனக்கு ஒரு பெயர் இருக்கிறது.

நிறைய படங்களில் நடிக்காதது ஏன்?
நம்மை விட்டு வாய்ப்பு போய்விடுமோ என்ற பயத்தில் தான், பலரும் நிறைய படங்களில் நடிக்கிறார்கள்.

எனக்கு அந்த பயம் கிடையாது. நிறைய படங்களில் நடிப்பதை விட நல்ல படங்களில் நடிக்கவே விரும்புகிறேன்.

தற்போது தெலுங்கில் நான்கு படங்களில் நடிக்கிறேன். இதை முடித்த பிறகே தான் அடுத்த படங்கள். வரும் வாய்ப்புகளில் எல்லாம் நடிக்க விரும்பவில்லை.

தமிழில் அடுத்த படம் எப்போது?
சங்கத்தமிழன் படத்திற்கு பின் பிரதீப் என்ற புதியவர் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். பெண்கள் சம்பந்தப்பட்ட கதை இது.

இது கொஞ்சம் ரிஸ்க்கான கதை தான், இருப்பினும் கதை மேல் உள்ள நம்பிக்கையில் தைரியமாக நடிக்கிறேன்.

தமிழா, தெலுங்கா… எங்க செட்டிலாக போறீங்க?
மதுரையில் பிறந்து, துபாயில் வளர்ந்து, சென்னையில வாழ்க்கை தொடங்கி, இப்போது ஹைதராபாத்தில் வீடு பார்த்து வருகிறேன்.

தெலுங்கில் வாய்ப்பு வருவதால் ஹோட்டலில் தங்குவதை விட ஹைதராபாத்தில் ஒரு வீடு பார்க்கலாம் என அதற்கான வேலையில் இறங்கி உள்ளேன்.

தமிழ் படங்களில் நடிப்பதால் அங்கும் ஒரு வீட்டில் வசிக்கிறேன்.

எங்க செட்டில் ஆக வேண்டும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.

வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறேன்.

அப்பா, அம்மா துபாயில் உள்ளனர்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்னை வந்து பார்த்து செல்வார்கள்.

இப்போது தம்பி, சித்தி உடன் இருக்கிறேன்.

சினிமாவில் உங்கள் தோழிகள்?
ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் அவ்வப்போது பேசுவார்.

சமீபத்தில் ரித்து வர்மாவை சந்தித்தேன். மற்றபடி பெரிய நட்பு வட்டாரம் இல்லை.

அடுத்து ஹிந்தி தானா?
விக்ரமை வைத்து ‘டேவிட்’ படத்தை இயக்கிய விஜய் நம்பியார், ஹிந்தியில் நடிக்க ஒரு வாய்ப்பு தந்தார்.

ஹிந்தி தெரியாது என்பதால் என்னை விட்டுவிடுங்க என கூறிவிட்டேன்.

ஹிந்திக்கு செல்ல விருப்பம் இல்லை, அது என் கனவும் இல்லை.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!