மக்களிடம் மன்னிப்பு கோரிய சாக் ஷி

0 275

பிக்பொஸ் நிகழ்ச்சியின் போது மக்களை நாய் என்று கூறியதற்கு எதிர்ப்புப் கிளம்பியதால், ரசிகர்களிடம் சாக்‌ஷி மன்னிப்புக் கேட்டார்.

 கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் உள்ளனர்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி அகர்வால், அபிராமி, மோகன் வைத்யா ஆகிய மூவரும் கடந்தவாரம் பிக்பொஸ் வீட்டுக்கு விருந்தாளிகளாக சென்றனர்.

அந்த நேரத்தில் ஷெரின் –- தர்ஷன் இடையேயான நட்பை காதல் என்று வனிதா கூறியதால் ஷெரின் மனம் உடைந்தார்.

அவரை ஆறுதல்படுத்திய சாக்‌ஷி நிகழ்ச்சியை பார்க்கும் மக்களை நாய்கள் என்று ஷெரினிடம் கூறினார்.

இதற்கு பார்வையாளர்கள் சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சாக்‌ஷி ‘விஸ்வரூபம்’, ‘காலா’ படங்களில் நடித்தவர்.

அதை தொடர்ந்து நேற்று முன்தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன்,

சாக்‌ஷி பேசியதை மேடையில் குறிப்பிட்டார்.

ஆனால் சாக்‌ஷி நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் கூறியிருப்பதாவது:- ‘அனைத்து பிகபொஸ் பார்வையாளர்களுக்கும்.

எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன்.

அதற்காக உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அது ஷெரினை ஆறுதல் படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி.

உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.

எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன்.

உங்கள் அனைவரிடம் இருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு, மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன். உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன்.

நீங்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து ஆதரவளிக்கவும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!