வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 11 : 2001-செப்டெம்பர் 11 தாக்குதல்கள் இடம்பெற்றன

0 47

1541 : சிலியின் சண்­டி­யாகோ நகரம் மிச்­சி­மா­லொன்கோ தலை­மை­யி­லான பழங்­கு­டி­க­ளினால் அழிக்­கப்­பட்­டது.

1649 : ஒலிவர் குரொம்­வெல்லின் இங்­கி­லாந்து நாடா­ளு­மன்றப் படைகள் அயர்­லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்­பற்றி ஆயிரக்கணக்­கா­னோரைக் கொன்­றன.

2001: செப்டெம்பர் 11 தாக்குதல்கள் இடம்பெற்றன

1708 : சுவீ­டனின் பன்­னி­ரெண்டாம் சார்ள்ஸ் மன்னன் தனது மொஸ்­கோவின் மீதான படை­யெ­டுப்பை ஸ்மொலியென்ஸ்க் என்ற இடத்தில் இடை­நி­றுத்­தினார்.

அவரின் படைகள் 9 மாதங்­களின் பின்னர் தோற்­க­டிக்­கப்­பட்­டன.

1709 : பிரித்­தா­னியா, நெதர்­லாந்து, ஆஸ்­தி­ரியா ஆகி­யன பிரான்ஸ் மீது போர் தொடுத்­தன.

1893 : முத­லா­வது உலக சமய நாடா­ளு­மன்ற மாநாடு சிக்­கா­கோவில் ஆரம்­ப­மா­னது.

1897 : எதி­யோப்­பி­யாவின் இரண்டாம் மெனெலிக் மன்னர் கஃபா இராச்­சி­யத்தைக் கைப்­பற்­றினார்.

1906 : மகாத்மா காந்தி சத்­தி­யாக்­கி­ரகம் என்ற சொற்­ப­தத்தை தென் ஆபி­ரிக்­காவில் வன்­மு­றை­யற்ற இயக்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு பயன்­ப­டுத்த ஆரம்­பித்தார்.

1914 :அவுஸ்­தி­ரே­லியா புதிய பிரித்­தா­னியத் தீவினுள் நுழைந்து அங்கு நிலை கொண்­டி­ருந்த ஜேர்­ம­னியப் படை­களை வெளியேற்­றியது.

1916 : கன­டாவின் கியூபெக் பாலத்தின் மத்­திய பகுதி உடைந்து வீழ்ந்­ததில் 11 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1919 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் கடற்­ப­டை­யினர் ஹொண்­டு­ரா­சினுள் நுழைந்­தனர்.

2012: பாகிஸ்தான் ஆடைத் தொழிற்சாலை தீயினால் 315 பேர்பலி

1926 : இத்­தா­லிய சர்­வா­தி­காரி பெனிட்டோ முசோ­லினி மீதான கொலை­மு­யற்சி தோல்­வி­ய­டைந்­தது.

1940 : இரண்டாம் உலகப் போரில் இங்­கி­லாந்தின் பக்­கிங்ஹாம் அரண்­மனை ஜேர்­ம­னி­யி­னரின் வான் தாக்­கு­தலில் சேத­ம­டைந்­தது.

1944 : ஜேர்­ம­னியின் டார்ம்ஸ்டாட் நகரில் இடம்­பெற்ற பிரித்­தா­னி­யரின் குண்­டு­வீச்சில் 11,500 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1968 : பிரான்ஸில் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 95 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1973 : சிலியின் மக்­க­ளாட்சி அரசு இரா­ணுவப் புரட்­சியில் கவிழ்க்­கப்­பட்­டது. ஜனா­தி­பதி சல்­வடோர் அலெண்டே கொல்­லப்­பட்டார். இரா­ணுவத் தலைவர் ஆகுஸ்டோ பினொச்சே ஆட்­சியைக் கைப்­பற்றி 17 ஆண்­டுகள் சர்­வா­தி­கார ஆட்­சியை நடத்­தினார்.

1974 : அமெ­ரிக்­காவின் வட கரோ­லி­னாவில் விமானம் ஒன்று வீழ்ந்­ததில் 71 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1978 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜிம்மி கார்ட்டர், எகிப்­திய ஜனா­தி­பதி அன்வர் சதாத், இஸ்ரேல் பிர­தமர் பெகின் ஆகியோர் மத்­திய கிழக்கு அமைதி முயற்­சி­களை முன்­னெ­டுக்க அமெ­ரிக்­காவின் கேம்ப் டேவிட்டில் சந்­தித்­தனர்.

1989 : ஹங்­கே­ரிக்கும் ஆஸ்­தி­ரி­யா­வுக்­கு­மான எல்லை திறந்து விடப்­பட்­டதில் ஆயி­ரக்­க­ணக்­கான கிழக்கு ஜேர்­மனி மக்கள் தப்­பி­யோ­டினர்.

1992 : ஹவாய் தீவை சூறா­வளி தாக்­கி­யதில் அத்­தீவில் பலத்த சேதங்கள் ஏற்­பட்­டன.

1997 : ஐக்­கிய இராச்­சி­யத்­தினுள் அடங்­கிய தனி­யான ஸ்கொட்­லாந்து நாடா­ளு­மன்­றத்தை அமைப்­ப­தற்கு ஆத­ர­வாக ஸ்கொட்­லாந்து மக்கள் வாக்­க­ளித்­தனர்.

2015: மக்கா நகரில் பளுதூக்கியொன்று சரிந்து வீழ்ந்ததால் 111 பேர் பலி

2001 : நியூயோர்க் நகரின் உலக வர்த்­தக மையம் மற்றும் அமெ­ரிக்க இரா­ணுவத் தலை­மை­ய­க­மான பென்­டகன் மீது, கடத்­தப்­பட்ட விமா­னங்கள் மூலம் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களில் 2,996 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2012: பாகிஸ்­தானில் இரு ஆடைத்­தொ­ழிற்­சா­லைகள் தீப்­பற்­றி­யதால் 315 பேர் உயி­ரி­ழந்­தனர்.

2012: லிபி­யாவில் அமெ­ரிக்கத் தூத­ரகம் தாக்­கப்­பட்­டது. அமெ­ரிக்கத் தூதுவர் உட்­பட நால்வர் பலி­யா­கினர்.

2015: சவூதி அரே­பி­யாவின் மக்கா நகரில் பள்­ளி­வாசல் மீது பளு­தூக்கி (கிரேன்) ஒன்று வீழ்ந்­ததால் 12 நாடு­களைச் சேர்ந்த 111 பேர் உயிரிழந்தனர்.

2017: இலங்கையில் 1818 ஆம் ஆண்டு சுதந்திரக் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் யுத்த நீதிமன்றினால் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 81 இலங்கை சுதந்திரப் போராட்ட வீரர்களையும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி வெளியிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!