ஈராக்கில் சனநெரிசலால் 31 யாத்திரிகர்கள் பலி! சுமார் 100 பேர் காயம்!

0 550

ஈராக்கில்  சனநெரிசலில் சிக்கி குறைந்தபட்சம் 31 யாத்திரிகர்கள் உயிரிழந்ததுடன் மேலும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (10) ஈராக்கிலுள்ள புனித நகரான கர்பாலாவில்  இடம்பெற்றது.

அசூரா புனித தினத்தையொட்டி, கர்பாலா நகரிலுள்ள ஷியா வணக்கஸ்தலமொன்றில்  இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
இதன்போது இமாம் ஹுஸைன் அடக்கஸ்தலத்துக்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோதே சன நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்ததுடன் மேலும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர் என ஈராக்கிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.   

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!