அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் பதவி விலகினார்

0 171

அமெ­ரிக்­காவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் ஜோன் அப்­ப­த­வி­யி­லி­ருந்து வில­கி­யுள்ளார். ஜோன் போல்­டனை இரா­ஜி­னாமா செய்­யு­மாறு தான் கூறி­ய­தா­கவும், இதன்­படி ஜோன் போல்டன் இரா­ஜி­னாமா கடி­தத்தை சமர்ப்­பித்­த­தா­கவும் ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­விக்­கையில், ‘பாது­காப்பு ஆலோ­சகர் ஜோன் போல்டன் அளித்த பல்­வேறு ஆலோ­ச­னை­களின் மீது எனக்கு நம்­பிக்கை இல்லை.

மேலும் இவற்றில் அதி­ருப்­தியும், கடும் கருத்து வேறு­பா­டு­களும் இருந்­தன.

அவ­ரு­டைய நட­வ­டிக்­கை­களின் மேல் இதே நிலை தான் இதர அதி­கா­ரி­க­ளுக்கும் காணப்­பட்­டது.

எனவே, இரா­ஜி­னாமா செய்­யு­மாறு ஜோன் போல்­டனை அறி­வு­றுத்­தினேன்.

இதை­ய­டுத்து அவரும் தனது ராஜி­னாமா கடி­தத்தை சமர்ப்­பித்தார். ஜோன் பால்டன் இது­வரை ஆற்­றிய பணிக்கு நன்றி தெரி­வித்­துக்­கொள்­கிறேன்’ எனத் தெரி­வித்­துள்­ளர்ர.

இந்­நி­லையில், தானே இரா­ஜி­னாமா செய்­த­தாக ஜோன் போல்டன் தெரி­வித்­துள்ளார்.’நான் இரா­ஜி­னாமா செய்­வ­தாக கூறினேன். இது குறித்து நாளை பேசலாம் என ஜனா­தி­பதி ட்ரம்ப் தெரி­வித்தார்’ என ஜோன் போல்டன் தெரி­வித்­துள்ளார்.

ஆப்­கா­னிஸ்தான், வட கொரியா மற்றும் ஈரான் விட­யங்­களில் கடும் போக்கை ஜோன் போல்டன் கடை­ப்பி­டித்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

கடந்த வாரம் அமெ­ரிக்­காவின் கேம்ப் டேவிட்டில் நடை­பெ­ற­வி­ருந்த ஜனா­தி­பதி ட்ரம்­புக்கும் தலி­பான்­க­ளுக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தைக்கும் ஜோன் போல்டன் ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.
பின்னர் இப்பேச்சுவார்த்தையை ஜனாதிபதி ட்ரம்ப் இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!