மவுஸாக்கலை நீர்தேக்கத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் போத்தல்கள், உக்காத பொருட்களால் சூழலும், களனி கங்கை நீரும் மாசடைவு!

பல தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த கழிவுகளை அகற்றும் பணி

0 56

(க.கிஷாந்தன்)

மஸ்­கெ­லியா மவு­ஸாக்­கலை நீர்­தேக்­கத்தில் பிளாஸ்டிக் போத்­தல்கள் மற்றும் உக்­காத பொருட்கள் அதி­க­ரித்­துள்­ளதால் சூழல் மாச­டைவு ஏற்­பட்டு களனி கங்­கைக்கு செல்லும் இந்த நீரில் மாசுத் தன்மை காணப்­ப­டு­கி­றது.

இத­னை­ய­டுத்து மவு­ஸாக்­கலை நீர் ­தே­கத்தில் கரை­யோர பகு­திகள் மற்றும் நீரேந்தும் பகு­தி­களில் நிரம்பி இருக்கும் பிளாஸ்டிக் போத்­தல்கள் மற்றும் உக்­காத பொருட்­களை சேக­ரிக்கும் வேலைத்­திட்டம் நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இவ் வேலைத்­திட்­டத்தை நல்­ல­தண்ணி, சீத்­த­கங்­குல கிராம அபி­வி­ருத்தி சங்கம் மற்றும் இலங்கை மின்­சார சபை ஆகி­யன ஒன்­றி­ணைந்து மேற்­கொண்­டன.

நல்­ல­தண்ணி, மோகினி நீர்­வீழ்ச்சி, மறே நீர்­வீழ்ச்சி மற்றும் காட்மோர் நீர்­வீழ்ச்சி மற்றும் சீத்­த­கங்­குல ஓயா போன்ற பகு­தி­களில் சுற்­றி­யுள்ள குடி­யி­ருப்­பா­ளர்கள் மற்றும் மஸ்­கெ­லியா மற்றும் நல்­ல­தண்ணி பகு­தி­க­ளுக்கு வருகை தரும் சுற்­றுலா பிர­யா­ணிகள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் போத்­தல்கள் மற்றும் உக்­காத பொருட்­களே இவ்­வாறு அகற்­றப்­பட்­டன.

நல்­ல­தண்ணி, சீத்­த­கங்­குல கிராம அபி­வி­ருத்தி சங்கம் மற்றும் இலங்கை மின்­சார சபை, மவு­ஸாக்­கலை நீர்­தேக்­கத்தின் பாது­காப்பு படை­யினர், கடற்­படை அதி­கா­ரிகள், நல்­ல­தண்ணி பொலிஸார், ஆகியோர் இந்த சிர­ம­தான பணியில் கலந்து கொண்­டி­ருந்­தனர். இந்த குப்­பை­களை சேக­ரிக்கும் வேலைத்­திட்­டத்தின் ஊடாக சேக­ரிக்­கப்­பட்ட குப்­பை­களை மஸ்­கெ­லியா பிர­தேச சபையின் சுகா­தார பிரி­விடம் ஒப்­ப­டைத்­தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!