கிரிக்கெட் சபையில் எத்தகைய நிலையிலும் பதவி வகிக்க திலங்க சுமதிபாலவுக்கு தடை

0 180

திலங்க சும­தி­பா­ல­வுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையில் எத்­த­கைய நிலை­யிலும் பதவி வகிக்க முடி­யா­த­வாறு விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் ஹரின் பெர்­னாண்டோ விசேட உத்­த­ர­வொன்றை பிறப்­பித்­துள்ளார்.

திலங்க சும­தி­பால மீது சுமத்­தப்­பட்­டுள்ள மோசடி குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக விசா­ரணை நடத்தி ஒரு மாதத்­துக்குள் அறிக்கை சமர்ப்­பிக்­கும்­வரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தில் அவர் எத்­த­கைய நிலை­யிலும் பதவி வகிப்­பதை தடுக்கும் வகையில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் ஹரின் பெர்­னாண்டோ விசேட உத்­த­ர­வொன்றைப் பிறப்­பித்­துள்ளார்.

இது தொடர்­பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர், செய­லாளர் மற்றும் நிரு­வாக சபை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் எழுத்­து­மூலம் அறி­வித்­துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் எந்­த­வொரு நிரு­வாக சபைக் கூட்­டத்­திலும் கலந்­து­கொள்­வ­தற்கும், வாக்­க­ளிப்­­ப­தற்கும் திலங்க சுமதி­பா­லவை தடுக்­கு­மாறு அல்­லது தவிர்க்­கு­மாறு இத்தால் உத்­த­ர­வி­டப்­ப­டு­கின்­றது. அத்­துடன் நிரு­வாக உத்­தி­யோ­கத்­த­ரா­கவோ, உடன் முன்­னைய தலை­வ­ரா­கவோ திலங்க சும­தி­பால செயற்­ப­டு­வ­தையும் தடுக்­கு­மாறு அல்­லது தவிர்க்குமாறு இத்தால் உத்­த­ர­வி­டப்­ப­டு­கின்­றது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வன தலைவர், செய­லாளர், நிரு­வாக உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு அமைச்சர் அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

பிலி­யந்­தல டவுன் விளை­யாட்டுக் கழ­கத்­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள முறைப்­பாட்டை அடுத்து, 1973 விளை­யாட்­டுத்­துறை சட்­டக்­கோவை பிரிவு 39 (1)இன் 25 இலக்­கத்­துக்கு அமை­யவும் அதன் திருத்­தங்­க­ளுக்கு அமை­யவும் இந்த உத்­த­ரவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைக்கு அமைச்சர் ஹரின் பெர்­னாண்டோ பிறப்­பித்­துள்ளார்.

திலங்க சும­தி­பா­ல­வுக்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள முறைப்­பாட்டை விசா­ரணை செய்து இன்­றி­லி­ருந்து ஒரு மாதத்­துக்குள் அறிக்கை சமர்ப்­பிக்கும் வகையில் விளை­யாட்­டுத்­துறை அபி­வி­ருத்தி திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் தம்­மிக்க முத்­து­கல, விளையாட்டுத்துறை அமைச்சின் சட்டத்துறை அதிகாரி ஷிரோமி ரணவக்க, ஓய்வுநிலை சிரேஷ்ட விமானப்படை அதிகாரி சட்டத்தரணி எஸ். டி. பியதாச ஆகிய மூவரைக் கொண்ட குழுவை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!