இலங்கையுடனான ஓவர் கிரிக்கெட் தொடர்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என்கிறது பாகிஸ்தான்

0 208

இலங்­கையின் பிர­தான கிரிக்கெட் வீரர்கள் தமது நாட்­டுக்­கான கிரிக்கெட் சுற்­றுப்­ப­ய­ணத்தை தவிர்க்­கின்­ற­போ­திலும் தமது நாட்டில் நடை­பெ­ற­வுள்ள இலங்­கைக்கு எதி­ரான கிரிக்கெட் தொடர்கள்  திட்­ட­மிட்­ட­படி நடை­பெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரி­வித்­தது.

ஸ்ரீ­லங்கா கிரிக்கெட் சபை எதிர்­நோக்கும் நிலைமை குறித்து நாங்கள் அறிவோம்.

எமக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக அமையும் இந்த சுற்றுப் பய­ணத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்­களை பங்­கு­பற்­று­மாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­தினால் கட்­டா­யப்­ப­டுத்த முடி­யாது என்­ப­தையும் அறிவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

“இந்த சுற்றுப் பயணம் வெற்­றி­க­ர­மாக அமைந்தால், பாகிஸ்­தானில் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்ள ஐ.சி.சி. உலக டெஸ்ட் வல்­லவர் போட்­டியில் விளை­யா­டு­வதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையோ, பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபையோ எந்த அடிப்­ப­டையில் மறுக்­க­மு­டியும்.

இந்த மாதத்­த­லி­ருந்து பாகிஸ்­தா­னுக்கு விஜயம் செய்யும் அணியில் எந்த வீரர்கள் இடம்­பெற்­றாலும் அது இலங்­கையின் தேசிய அணி­யா­கவே எமது கிரிக்கெட் சபை­யினால் கரு­தப்­படும்” என அந்த அதி­காரி கூறினார்.

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள 3 போட்­டி­களைக் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளை­யாடும் இலங்கை அணி எதிர்­வரும் 25ஆம் திகதி கராச்சி சென்­ற­டையும். அதனைத் தொடர்ந்து 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் லாகூரில் நடைபெறும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!