நண்பனின் வீட்டுக்கு நால்வரை அனுப்பி சிலைகளைத் திருடச் செய்த சிப்பாய் கைது

0 72

(ரெ.கிறிஷ்­ணகாந்)

பாணந்­துறை -மொர­வின்ன பிர­தே­சத்­தி­லுள்ள வர்த்­தகர் ஒரு­வரின் வீட்­டி­லி­ருந்த நாயைக் கொலை செய்­த­துடன், அவ்­வீட்­டி­லி­ருந்த பெறு­ம­தி­யான புத்தர் சிலை உள்­ளிட்ட மூன்று சிலை­களைத் திரு­டிய குற்­றச்­சாட்டில் இரா­ணுவ கோப்ரல், லான்ஸ் கோப்ரல் உட்­பட நால்­வரை களுத்­துறை வலய குற்றப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ அதி­கா­ரிகள் இரு­வரும் பாணந்­துறை நல்­லு­ருவ இரா­ணுவ முகாமில் பணி­யாற்­றி­ய­வர்கள் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

சந்­தேக நப­ரான கோப்ரல் தர +இரா­ணுவ அதி­காரி, மேற்­படி வர்த்­த­கரின் நெருங்­கிய நண்பர் எனவும் அவர் சில மாதங்­க­ளுக்கு முன்னர் தனது வீட்­டுக்கு வந்­தி­ருந்­த­போது, செப்­பினால் வார்க்­கப்­பட்ட பிள்­ளையார் சிலை ஒன்றை குறித்த வர்த்­தகர் தனது நண்­ப­ருக்கு காண்­பித்­துள்­ள­தா­கவும் ஆரம்பக் கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரியவந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நி­லையில், சந்­தே­க­ந­ப­ரான கோப்ரல் தர இரா­ணுவ அதி­காரி, அந்த சிலையை திரு­டு­வ­தற்கு திட்டம் தீட்­டி­ய­துடன், அதற்­காக ரத்ன என்ற கிரா­மத்தைச் சேர்ந்த நால்­வரின் உத­வி­யுடன் இந்த திருட்டை மேற்­கொண்­டுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­நி­லையில், குறித்த வர்த்­த­கரின் வீட்டார் தமது மகனின் சிகிச்சை விட­ய­மாக வீட்­டி­லி­ருந்து வெளியூர் சென்­றுள்­ளதை அறிந்­து­கொண்ட சந்­தேக நப­ரான கோப்ரல், கடந்த முதலாம் திகதி, குறித்த நால்­வ­ரையும் பாணந்­து­றைக்கு வர­வ­ழைத்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

திருடச் சென்­ற­போது, அதற்கு தடை­யாக இருந்த வர்த்­தகர் வீட்டு நாயையும் கொலை செய்­ததன் பின்னர் அன்­றி­ரவு சந்­தே­க­ந­பர்கள் திருட்டில் ஈடு­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

வர்த்­த­க­ருக்கு சந்­தேகம் ஏற்­படக் கூடாது என்­ப­தற்­காக, இந்த திருட்டின் சூத்­தி­ர­தா­ரி­யான கோப்ரல், குறித்த வர்த்­த­க­ரு­ட­னேயே அவ­ரது மகனின் சிகிச்சை விட­ய­மாக சென்­றுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!