பிரிட்டனில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்கள் 2 வருடங்கள் தொழில்புரிய அனுமதி: பிரித்தானிய அரசின் புதிய திட்டம்

International students can stay in UK for two years after graduating

0 803

பிரிட்டனில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டம் பெற்ற பின்னர் 2 வருடங்கள் பிரிட்டனில் தங்கியிருந்து தொழில்புரிய அனுமதிக்கப்பதற்கான புதிய திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் முன்வைத்துள்ளது.

2012 ஆம் ஆண்டில் அப்போதைய பிரித்தானிய உள்துறை செயலாளர் பதவி தெரேசா மே, கொண்டு வந்த விதிகளின்படி, வெளிநாட்டு மாணவர்கள் பட்டம் பெற்று 4 மாதங்களில் பிரிட்டனிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

பின்னர் 2016 ஆம் ஆண்டு பிரித்தானிய பிரதமராக தெரேசா மே பதவி வகித்தார். கடந்த ஜூலை மாதம் அவர் இராஜினாமா செய்த பின்னர் பிரதமராக பதவியேற்ற போரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் மேற்படி திட்டத்தை மாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளது.

பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ள புதிய விஸா விதிகளின்படி வெளிநாட்டு மாணவர்கள் பட்டம் பெற்ற பின்னர் 2 வருடங்கள் பிரிட்டனில் தங்கியிருந்து தொழில்புரிய அனுமதிக்கப்படுவர்.

இம்மாற்றமானது, மாணவர்கள் பிரிட்டனில் தமது தொழில் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களை திறந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடமளவில் பட்டப்படிப்பு மற்றும் அதனைவிட உயர்கல்வியை ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு இம்மாற்றம்; செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!