112 பேரை சுட்டுக்கொன்ற இந்திய என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் சர்மா ஓய்வு பெற்றார்!

0 303

இந்­தி­யாவில் பாதாள உல­கத்­தினர் எனக்­கூ­றப்­படும் 112 பேரை சுட்­டுக்­கொன்ற, பிர­பல பொலிஸ் அதி­காரி பிரதீப் சர்மா 35 வருட கால சேவையின் பின்னர் பணி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றுள்ளார்.

மஹா­ராஷ்­டிரா மாநி­லத்தைச் சேர்ந்­தவர் பிரதீப் சர்மா, 58 வய­தா­னவர்.

1983 ஆம் ஆண்டு, மும்பை தாராவி பொலிஸ் நிலை­யத்தில் பணி­யாற்­றிய காலம் முதல் பல்­வேறு பத­வி­களை வகித்­தி­ருந்தார்.

குற்­ற­வா­ளி­களைத் தேடிச் சென்று சுட்­டுக்­கொல்­வதில் பிர­ப­ல­மா­னவர் பிரதீப் சர்மா.

1997 முதல் 2003 ஆம் ஆண்­டு­வரை பாதாள உல­கக்­கு­ழு­வினர் மற்றும் ரவு­டிகள் மற்றும் பயங்­க­ர­வா­திகள் 112 பேரை அவர் சுட்­டு­ கொன்­றுள்ளார்.

என ஊடக அறிக்­கை­களை மேற்­கோள்­காட்டி ஏ.எவ்.பி. தெரி­வித்­துள்­ளது.

பிரதீப் சர்­மாவின் 112 என்­க­வுண்­டர்­க­ளுடன் அவரின் குழு­வினர் இணைந்து சுமார் 600 பாதாள உல­கத்­தி­னரை சுட்­டுக்­கொன்­றனர் என ஊட­கங்கள் தெரி­விக்­கின்­றன.

ஹொலிவூட் நடிகர் கிளின் ஈஸ்வூட் நடித்த இன்ஸ்­பெக்டர் டேர்ட்டி ஹரி எனும் பாத்­திரம் பிர­சித்­த­மா­னது.

இந்­நி­லையில் நிஜ வாழ்வின் டேர்ட்டி ஹரி என பிரதீப் சர்மா வர்­ணிக்­கப்­பட்டார்.எனினும், அவரின் பொலிஸ் வாழ்க்கை ஏற்­றத்­தாழ்­வுகள் கொண்­டது. அவர் மீது போலி என்­க­வுன்டர் வழக்­குகள் பல தாக்கல் செய்யப்­பட்­டன.

2008 ஆம் ஆண்டு, தாவூத் இப்­ராஹிம் குழு­வி­ன­ருடன் தொடர்பு வைத்­தி­ருந்­தது, மற்­றொரு நிழல் உலக தாதா, சோட்டா ராஜனின் கூட்­டாளி லக்கான் பையாவை போலி என்­க­வுன்டர் மூலம் சுட்­டுக்­கொன்ற வழக்கு உள்­ளிட்ட வழக்­கு­களில், 2010-ம் ஆண்டு பிரதீப் சர்மா கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்டார்.

2013 ல் லக்கான் பையா என்­க­வுன்டர் வழக்கில் வழங்­கப்­பட்ட தீர்ப்பில் விடு­விக்­கப்­பட்டார்.

2020 ஆம் ஆண்டு மே மாதம் இவர் ஓய்வு பெற­வி­ருந்த நிலையில் சொந்த கார­ணங்­க­ளுக்­காக முன்­கூட்­டியே ஓய்வு பெறு­வதற்­காக அண்­மையில் விண்­ணப்­பித்தார்.

அவ­ரது இரா­ஜி­னாமா ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­தாக மஹா­ராஷ்­டிரா மாநில அர­சாங்கம் சாங்கம் தெரிவித்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!