தினமும் ஹெல்மெட் அணிந்து கார் செலுத்தும் இளைஞர்! இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என பயமாம்

0 145

இந்­தி­யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அப­ராதம் விதிக்­கப்­படும் என்ற பயத்தில் தினமும் ஹெல்மெட் அணிந்து கார் செலுத்­து­கிறார்.

இந்­திய மத்­திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த முதலாம் திகதி முதல் இந்­தியா முழு­வதும் அம­ுலுக்கு வந்­துள்­ளது. அதன்­படி, போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை மீறும் வாகன ஓட்­டி­க­ளுக்கு அதிக அளவில் அப­ரா­தங்கள் விதிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதன்­படி போக்­கு­வ­ரத்து விதி­களை மீறு­வோ­ருக்­கான அப­ராதம் பல மடங்கு உயர்த்­தப்­பட்­டுள்­ளது. சில நாட்­க­ளுக்கு முன்பு டெல்­லியில் மோட்டார் சைக்கிள் செலுத்­தி­ய­வ­ருக்கு 23,000 இந்­திய ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்­டது.

ஒடி­சாவில் சத்­தீஸ்­கரை நோக்கிச் சென்று கொண்­டி­ருந்த லொறி ஒன்றின் சார­தி­யிடம்; உரிமம் இல்­லா­தது உட்­பட பல விதி­மீ­றல்­க­ளுக்­காக அவ­ருக்கு 86,000 ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்­டது.

டெல்­லியின் ஷேக் சாராய் பகு­தியில் இரு­சக்­கர வாக­னத்தில் சென்று கொண்­டி­ருந்த ஒரு இளைஞர் போதையில் இருந்­த­தாக பொலிஸார் அவ­ருக்கு ரூ.25,000 அப­ராதம் விதித்­தனர். இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த அந்த இளைஞர் தனது இரு­சக்­கர வாக­னத்தைத் தீ வைத்து எரித்தார். இது போன்ற எண்­ணற்ற சம்­ப­வங்கள் இந்­திய சார­தி­க­ளிடம் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

இந்­நிலையில், உத்­தரப் பிர­தேச மாநிலம் அலிகார் மாவட்­டத்தில் சில தினங்­க­ளுக்குமுன் இளைஞர் ஒருவர் கார் ஓட்­டும்­போது ஹெல்மெட் அணி­ய­ வில்லை என்று கூறி பொலிஸார் 500 ரூபா அப­ராதம் விதித்த சம்­பவம் சமூக வலை­த­ளங்­களில் விமர்­சிக்­கப்­பட்­டது.

இச்­சம்­பவம் தவ­றாக நடந்­து­விட்­டது என பொலிஸ் தரப்பில் விளக்கம் கூறப்­பட்­டி­ருந்­தது.
எனினும், தற்­போது பியுஷ் வர்ஷ்னே என்ற அந்த இளைஞர் தினமும் ஹெல்மெட் அணிந்து கார் செலுத்­து ­கிறார்.

இது குறித்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய அவர், மறு­ப­டியும் அப­ராதம் செலுத்த வேண்டி வருமோ என்ற பயத்தில் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டிக் கொண்­டி­ருப்­ப­தாகக் கூறி­யுள்ளார்.

இந்தச் சம்­பவம் குறித்து பொலிஸ் தரப்பில் கூறு­கையில், ”ஹெல்மெட் அணி­யாமல் கார் ஓட்­டி­ய­தற்­காக தன்­னிடம் அப­ராதம் வசூ­லிக்­கப்­பட்­ட­தாக அந்த இளைஞரிடமிருந்து புகார் வந்துள்ளது. விசாரித்தபோது இது தவறாக நடந்துள்ளது தெரியவந்தது. இது கவனக்குறைவால் நடந்த ஒரு தவறாகும்” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!