வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு தகவல்: பொலிஸார் மோப்ப நாய் சகிதம் தேடுதல்!

0 647
                                                                                         (ஓமந்தை)
 
வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக வவுனியா பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து  பொலிஸார்  இன்று (11) தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று காலை குறித்த தகவல் கிடைக்கபெற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு மோப்ப நாய் சகிதம் வருகை தந்த வவுனியா பொலிஸார்  தேடுதல் நடத்தினர்.   இதனால் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள், பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளபட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடற்படையினரால் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்று நாளை ஆளுனரது பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!