கல்முனையில் கைதானவரின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு!

0 226

                                                                                                                                         (பாறுக் ஷிஹான்)
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கைதான நபரை மேலும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் பாண்டிருப்பு கடற்கரையில் வைத்து கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் வழக்கு தாக்கல் செய்து இரு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு இன்று (11) கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் தொடர்பாக பொலிஸ் தரப்பில் இருந்து எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்காத நிலையில் பொலிஸார் மேலும் ஒருவாரம் மேலதிக விளக்கமறியலை கோரியதற்கு இணங்க நீதிவான் அனுமதி வழங்கினார்.

மேலும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட இச்சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் தரப்பினர் முன்னெடுப்பதுடன் சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி தனது தரப்பினரின் வழக்கை பயங்கரவாத தடை சட்டத்தில் இருந்து நீக்கி சாதாரண சிவில் வழக்கு ஊடாக முன்னெடுக்கமாறு கோரிக்கை விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!