திருமணம் குறித்து ஜான்வி கபூர்

0 70

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ‘தடக்’ படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது ‘குஞ்சன் சக்சேனா’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ‘பிரைட்ஸ்’ என்ற பத்திரிகையின் அட்டைப் படத்தை அலங்கரித்து, அதில் அவருடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும். தன்னுடைய திருமணம் எதிர்காலத்தில் எப்படி நடக்க வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்திருக்கிறார்.

“வருங்கால கணவர் நிஜமாகவே திறமைசாலியாகவும், அவர் என்ன செய்கிறாரோ அதில் அதிக ஆர்வம் உள்ள­வரா­கவும் இருக்க வேண்டும்.

அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு அவரிடமிருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்

. நகைச்சுவை உணர்வு அவருக்கு இருக்க வேண்டியது அவசியம். அவற்றையெல்லாம் விட என் மீது மிகவும் அன்பாக இருக்க வேண்டும்.

எனது திருமணம் உண்மையானதாக, என் மனதுக்கு ஏற்றபடி நெருக்கமாக இருக்க வேண்டும்.

ஆடம்பரமாகவோ, பேன்சியாகவோ இருக்க விருப்ப­மில்லை.

என்னுடைய திருமணம் திருப்பதியில், பாரம்பரி­யத்துடன் நடக்க வேண்டும்.

திருமணத்திற்கு காஞ்சிபுரம் பட்டு சேலை அணி­வேன்.

நான் விரும்பும் தென்னிந்திய உணவு வகைகள் இட்லி, சாம்பார், தயிர் சாதம், கீர் ஆகி­யவை உணவில் இடம் பெறும்,” என்று தென்னிந்தியப் பெண்ணின் எண்ணத்திலேயே தன் ஆசையை தெரிவித்­துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தெலுங்குப் பெண் நடிகை ஸ்ரீதேவி.

வட இந்தியத் தயாரிப்பாளர் போனி கபூரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருந்தாலும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் அம்மாவைப் போலவே தென்னிந்தியப் பெண்ணாகவே வளர்ந்திருக்கிறார் போலிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!