பிரித்தானிய நாடாளுமன்றத்தை இடைநிறுத்தியமை சட்டவிரோதம் : ஸ்கொட்லாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Scottish judges rule UK Parliament suspension is unlawful

0 360

பிரித்தானிய நாடாளுமன்றத்தை இடைநிறுத்தி வைக்கும் தீர்மானம் சட்டவிரோதமானது என ஸ்கொட்லாந்தின் அதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை 5 வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை பிரதமர் போரிஸ் ஜோன்சன் இடைநிறுத்தி வைத்துள்ளார்.

இத்தீர்மானம் சட்டவிரோதமானது என ஸ்கொட்லாந்து உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்துள்ளனர்.

எனினும், இது தொடர்பான உத்தரவு எதுவும் நீதிமன்றத்தால் விடுக்கப்படாததால் இத்தீர்ப்பு உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தாது எனத் தெரிவிக்க்பபடுகிறது.

இது தொடர்பான முழுமையான விசாரணை லண்டன்  உயர்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!