காத்தான்குடியில் கைதான தேசிய தெளஹீத் ஜமா அத் உறுப்பினருக்கு விளக்கமறியல்!

0 193

                                                                                                                          (எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலைத் தாக்குதல்களை ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகள் முன்னெடுத்ததாக சித்திரிக்க, விசேட வலையமைப்பு ஒன்றின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுத்ததாக கூறப்படும் தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் உறுப்பினரான அஹமது முஹம்மது அர்ஷாத் என்பவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க இன்று (11) உத்தரவிட்டார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் விவகார விசாரணைகளின் போது சந்தேக நபர் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டு, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபர் இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போதே அவரை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார். இவர் முன்னர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!