பெண்ணின் சடலத்தை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற மகன், பேரனை தேடும் வட்டவளை பொலிஸார்

0 123

(பொக­வந்­த­லாவை நிருபர் சதீஸ்)

வட்­ட­வளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட வட்­ட­வளை பிட்­டவீன் விக்­கடன் தோட்டப் பகு­தியில் உயி­ரி­ழந்த தனது தாயின் சட­லத்தை முச்­சக்­கர வண்­டியில் ஏற்றிச் சென்­றார்கள் எனக் கூறப்­படும் மகன், பேரப்­பிள்ளை மற்றும் சட­லத்தையும் கண்­டு­பி­டிக்க வட்­ட­வளை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

கடந்த 9 ஆம் திகதி விக்­டன் தோட்டப் பகு­தியில் சுக­யீனம் கார­ண­மாக 70 வய­தான பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை வட்­ட­வளை பொலிஸ் நிலை­யத்தில் விக்டன் தோட்ட மக்­களில் சிலர் வட்­ட­வளை பொலிஸில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தனர்.  இத­ன­டிப்­ப­டையில் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட வட்­ட­வளை பொலி ஸார் மேற்­கொண்­டனர்.

இந்த விசா­ர­ணை­களில் குறித்த தோட்டப் பகு­தியில் வசித்து வந்த 70 வய­தான குறித்த பெண் சுக­யீனம் கார­ண­மாக வீட்டில் இருந்­த­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இதே­வேளை குறித்த பெண்ணின் மகனின் மனைவி வெளி­நாட்டில் பணி புரிந்து வந்­த­தா­கவும் இரண்டு வரு­டங்­களின் பின் வீடு திரும்­பி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இது தொடர்பில் வெளி­நாட்­டி­லி­ருந்து திரும்­பிய பெண் (மகனின் மனைவி) பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில், காணாமல் போன­தாகக் கூறப்­பட்ட பெண் சுக­யீனம் கார­ண­மாக கடந்த 9 ஆம் திகதி உயி­ரி­ழந்தார். இத­னை­ய­டுத்து கண­வரும் மகனும் இணைந்து சட­லத்தை முச்­சக்­கர வண்­டியில் கொண்டு சென்­றனர்.

ஆனால் அவர்கள் சட­லத்தை எங்கு கொண்டு சென்­றனர்? என்ன செய்­தார்கள் தொடர்பில் எனக்கு தெரி­யாது. மேலும் சட­லத்தைக் கொண்டு சென்ற இருவர் தொடர்­பிலும் தக­வல்­களும் இல்லை என வட்­ட­வளை பொலி­ஸா ­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­துள்­ள­தாகத் தெரிய வந்­துள்­ளது.

இந்த நிலையில் பெண்ணின் சட­லத்­தையும் மகன் மற்றும் பேரப்­பிள்­ளை­யையும் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற னர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!