இரு இளம் பிக்குமாரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி, தாக்கிய வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விளக்கமறியல்

0 105

(ரெ.கிறிஷ்­ணகாந்)

பிக்­குமார் இரு­வரை கடு­மை­யாக தாக்­கிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் நேற்று கெப்பிதிகொல்லாவ நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து எதிர்­வரும் 24 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

வர்த்­தக நிலையம் ஒன்றில் இரண்டு இனிப்­பு­களை திரு­டி­ய­தாக கூறி, ஹொர­வப்­பொத்­தானை பிர­தே­சத்­தி­லுள்ள பிரி­வெனா ஒன்றில் கல்வி கற்கும் மாணவ பிக்­குமார் இரு­வரை நப­ரொ­ருவர் தாக்­கு­வ­தான காணொளி ஒன்று சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பர­வ­லாக பகி­ரப்­பட்டுவந்­தது.

இந்தக் காணொளி தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் பிர­காரம் தாக்­குதல் நடத்­திய நபர் அடை­யாளம் காணப்­பட்­ட­துடன் ஹொர­வப்­பொத்­தா­னையை சேர்ந்த கம்­மெத்தே சுமிந்த கல­கொட அல்­லது உடியா என்ற 37 வய­தான குறித்த இச்­சந்­தே­க­நபர் ஹொர­வப்­பொத்­தானை பொலி­ஸாரால் நேற்­று­முன்­தினம் கைது­செய்­யப்­பட்டார்.

கைது­செய்­யப்­பட்ட நபர், வர்த்­தக நிலையம் ஒன்றின் உரி­மை­யாளர் எனவும் தாக்­கு­த­லுக்கு இலக்­கான பிக்­குமார் இரு­வரும் 11 மற்றும் 14 வய­தா­ன­வர்கள் என்றும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். சந்­தேக நபர், குறித்த இளம் பிக்­கு­மாரை மிகவும் ஆபா­ச­மான வார்த்­தை­களால் திட்டி, அவர்கள் இரு­வரின் தலை மற்றும் கன்­னத்தில் கடு­மை­யாக தாக்கும் காட்­சிகள் குறித்த காணொ­ளியில் பதி­வா­கி­யி­ருந்­தன.

இச்­சம்­பவம் சுமார் 4 நாட்­க­ளுக்கு முன்னர் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­வித்த பொலிஸ் பேச்­சாளர், தண்­டனை சட்டக் கோவையின் கீழ் சந்­தேக நப­ருக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் தெரி­வித்தார். தாக்­கு­த­லுக்கு இலக்­கான பிக்­குமார் இரு­வரும் அநு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்­று­வ­ரு­வ­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை, இந்தத் தாக்­குதல் வீடி­யோ­வுடன் இணைந்­த­தாக, இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­யவர் எனக் கூறி நப­ரொ­ரு­வரின் புகைப்­ப­டமும் பகி­ரப்­பட்­டு­வ­ரு­கி­றது. இந்­நி­லையில், குறித்த புகைப்­ப­டத்தில் உள்­ள­தாகக் கூறப்­படும் நபர் பேஸ்புக் லைவ் வீடியோ ஒன்றை வெளி­யிட்டு, அப்­பிக்­கு­மாரை தாக்கியது தான் இல்லை எனவும், தனது புகைப்படம் தவறுதலாக இவ்வாறு பகிரப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் தான் கட்டாரில் பணியாற்றிவருவதாகவும் அந்நபர் குறித்த வீடியோவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!