5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: வெள்ளை வேன் தொடர்பில் தகவல்கள் அம்பலம்; குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு தெரிவிப்பு

0 328

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரைக் கடத்திச் சென்று கப் பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய சம்­ப­வத்தில் கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட வெள்ளை வேன் தொடர்பில் பல்­வேறு தக­வல்­களை விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நீதி­மன்­றுக்கு அறி­வித்­துள்­ளது.

549238 எனும் இலக்­கத்தை கொண்ட குறித்த வெள்ளை வேன் கடற்­ப­டையின் நட­வ­டிக்கை பிரிவு பணிப்­பா­ளரின் கீழ் வாடகை அடிப்­ப­டையில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் இந் நிலையில் கடத்­தல்கள் இடம்­பெற்ற காலப்­ப­கு­தியில் கடற்­படை நட­வ­டிக்கை பிரிவு பணிப்­பா­ள­ராக இருந்த அதி­கா­ரியை விசா­ரித்து வாக்­கு­மூலம் பெற நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் சி.ஐ.டி. கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்­க­வுக்கு அறி­வித்­தது.

இந்த கடத்­தல்கள் மற்றும் காணாமல் ஆக்கல் விவ­காரம் தொடர்பில் விசா­ரணை செய்யும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணை அறைப் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசந்த சில்­வவா மேல­திக விசா­ரணை அறிக்­கை­யுடன் இந்த விட­யங்­களை நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

அத்­துடன் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரைக் கடத்திச் சென்று கப்பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய சம்­பவம் தொடர்பில் எழுத்து மூலம் சி.சி.டி. எனும் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் அப்­போ­தைய பணிப்­பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேன­நா­யக்­க­வுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைத்த உண்மை நிலை­மைகள் மறைக்­கப்­பட்ட முறைப்­பாட்டின் பின்­ன­ணியில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சவேந்ர பெர்­ணான்டோ உள்­ளமை தொடர்பில் அவரை விசா­ரணை செய்ய தேவை­யான நீதி­மன்ற உத்­த­ரவை அவ­ரிடம் கைய­ளித்­துள்­ள­தா­கவும் இன்று (12)அவரை விசா­ரிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா நீதி­வா­னுக்கு சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்தக் கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தன. குறிப்­பாக, தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், மன்னார் – அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியா­க­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இவர்கள் அனை­வரும் காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது குறித்து சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசா­ரணைப் பிரிவு விசா­ரித்து வரு­கின்­றது. அது குரித்த நீதி­மன்ற விசா­ர­ணைகள் நேற்று இடம்­பெற்­றது.

வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது மேல­திக விசா­ரணை அறிக்­கையை சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி நிசாந்த சில்வா சமர்ப்­பித்து நீதி­மன்ரின் ஆலோ­ச­னைக்கு அமைய பெற்றுக் கொள்­ளப்ப்ட்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சவேந்ர பெர்­ணான்­டோவை விசா­ரிப்­ப­தர்­கான உத்­த­ரவு அவ­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும். நாளை ( இன்று) அவரை விசா­ரித்து வாக்­கு­மூலம் பெற­வுள்ளோம் என்று தெரி­வித்தார்.

அத்­துடன் கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வெள்ளை வேன் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் அந்த வேன் கடற்­படை நட­வ­டிக்கை பிரிவு பணிப்­பாளர் நாய­கத்தின் கீழ் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே அவ­ரிடம் விசா­ரணை செய்ய நட­வ­டிக்­கைஎ டுத்­துள்ளோம்.’ என குறிப்­பிட்டார்.

இத­னை­விட நீதி­மன்­ருக்கு முன்­வைக்­கப்ப்ட்­டுள்ள மேல­திக அறிக்­கை­களின் பிர­காரம்  ’54 9238 எனும் குறித்த வெள்ளை வேன் கடற்­படை லெப்­டினன்ட் கொமாண்டர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மா­னது எனவும் அது வலஸ்­முல்லை பகு­தியில் உள்ள வாகன வாடகை நிறு­வனம் ஒன்­றிடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­துள்­ள­மையும் அந்­நி­று­வ­னத்­தி­ட­மி­ருந்து கடற்­ப­டை­யினர் அதனை வாட­கைக்கு பெற்­றுள்­ள­மையும் தெரிய வந்­துள்­ளது.

அவ்­வாறு வாட­கைக்கு பெறப்­பட்ட வேன் அப்­போ­தைய கடர்­படை நட­வ­டிக்கை பனிப்­பாளர் நாய­க­மாக இருந்த கொலம்­ப­கேவின் கீழ் இருந்­துள்­ள­துடன் அதனை பிரதி நட­வ­டிக்கை பணிப்­பா­ள­ராக இருந்த டி.கே.பி. தஸ­நா­யக்­கவின் ஆலோ­ச­னை­க­ளுக்கும் அறி­வு­றுத்­தல்­க­ளுக்கும் அமைய நேவி சம்பத் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­மைக்­கான ும் அறிவுறுத்தல்களுக்கும் அமைய நேவி சம்பத் பயன்படுத்தியுள்ளமைக்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் அறிக்கைகள் ஊடாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்ப்ட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வழ்ககு விசாரணைகளில் விளக்கமறியலில் உள்ள நேவி சமப்த் எனும் ஹெட்டி ஆரச்சியை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் ஏனையோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!