பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்களுக்கான இலங்கை குழாம்கள் அறிவிப்பு

0 178

(நெவில் அன்­தனி)

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள இரு­வகை சர்­வ­தேச மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்­களில் விளை­யா­ட­வுள்ள இலங்­கையின் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு லஹிரு திரி­மான்­னவும் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் அணிக்கு தசுன் ஷானக்­கவும் அணித் தலை­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுன்­ளனர்.

தசுன், லஹிரு

 

இந்த இரண்­டு­வகை கிரிக்கெட் தொடர்­க­ளுக்­கு­மான இலங்கை குழாம்­க­ளிலும் தசுன் ஷானக்க, தனுஷ்க குண­தி­லக்க, சதீர சம­ர­விக்­ரம, அவிஷ்க பெர்­னாண்டோ, ஓஷத பெர்­னாண்டோ, ஷெஹான் ஜய­சூ­ரய, ஏஞ்­சலோ பெரேரா, மினோத் பானுக்க, வனிந்து ஹச­ரங்க, லக்ஷான் சந்­தகேன், இசுறு உதான, நுவன் ப்ரதீப், லஹிரு குமார, கசுன் ரஜித்த ஆகியோர் இடம்­பெ­று­கின்­றனர்.

லஹிரு திரி­மான்ன சர்­வ­தேச ஒருநாள் குழாத்தில் மாத்­திரம் இடம்­பெ­று­வ­துடன் பானுக்க ராஜ­பக்ஷ, லஹிரு மது­ஷன்க ஆகிய இரு­வரும் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் குழாத்தில் மாத்­திரம் இடம்­பெ­று­கின்­றனர்.

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ரிலும் 3 போட்டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ள இலங்கை அணி இம்மாதம் 25ஆம் திகதி அங்கு பயணமாகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!