மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்க்ஷ இன்று திருமண பந்தத்தில் இணைகிறார்!
ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உப்பினரும் முன்னாள் ஜனாதிபதியான தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ இன்று (12) திருமண பந்தத்தில் இணைகிறார்.
33 வயதான நாமல் ராஜபக்க்ஷ,22 வயதான லிமினி வீரசிங்கவை கைப்பிடிக்கிறார். இவர்களின் திருமண நிகழ்வு இன்று வீகெட்டிய ‘மிடில் கோர்ணர்’ இல் இடம்பெறுகிறது.