கரிபியன் ப்றீமியர் லீக்கில் திக்வெல்ல, திசர விளையாடுவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தடை

0 94

மேற்­கிந்­தியத் தீவு­களில் நடை­பெற்­று­வரும் கரி­பியன் ப்றீமியர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் நிரோஷன் திக்­வெல்ல, திசர பெரேரா ஆகியோர் விளை­யா­டு­வ­தற்­கான ஆட்­சே­பனை இல்லை என்ற சான்­றி­தழை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் மறுத்­துள்­ளது.

பாகிஸ்­தானில் நடை­பெ­ற­வுள்ள இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்­க­ளுக்­கான சுற்றுப் பய­ணத்தை தவிர்ப்­ப­தாக திக்­வெல்ல, திசர பெரேரா உட்­பட பத்து வீரர்கள் அறி­வித்­ததை அடுத்தே குறிப்­பிட்ட வீரர்கள் இரு­வ­ருக்கும் கரி­பியன் செல்­வ­தற்­கான ஆட்­சே­பனை இல்லை என்ற சான்­றி­தழை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் மறுத்­துள்­ளது.

சர்­வ­தேச கிரிக்கெட் சுற்றுப் போட்­டியில் பங்­கு­ பற்­ற­வுள்ள தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்­யப்­படும் வீரர் ஒருவர், குழாத்­தி­லி­ருந்து தானாக வாபஸ் பெற்றால் அவ­ருக்கு வெளி­நாட்டு லீக் போட்­டி­களில் பங்­கு­பற்­று­வ­தற்கு ஆட்­சே­பனை இல்லை என்ற சான்­றிதழ் வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்­பது ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் கொள்கை என அதன் பிர­தம நிறை­வேற்று அதி­காரி ஏஷ்லி டி சில்வா தெரி­வித்தார்.

பாகி;ஸ்தானில் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச ஒருநாள் மற்றும் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் பங்­கு­பற்றும் பொருட்டு இலங்கை அணி அங்கு செல்­ல­வுள்­ளது. ஆனால் உயிர் பாது­காப்பு கார­ணங்­களை முன்னிட்டு நிரோஷன் திக்வெல்ல, திசர பெரேரா உட்பட பத்து வீரர்கள் அங்கு செல்வதற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!