உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களின் பட்டியலில் ஒக்ஸ்போர்ட்  மீண்டும் முதலிடம்; இலங்கையில் பேராதனை முதலிடம்

Oxford University topped the latest Times Higher Education world university rankings

0 1,799

உலகிலுள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.

வருடாந்த டைம்ஸ் உயர்கல்வி உலகத் தரவரிசை 2020  ((Annual Times Higher Education world rankings 2020 )  பட்டியல் நேற்றிரவு வெளிடப்பட்டது.

92 நாடுகளைச் சேர்ந்த 1400 பல்கலைக்கழகங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இப்பட்டியலில் பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக 4 ஆவது தடவையாக முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 3 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

அமெரிக்காவின் ஸ்டன்போர்ட் (4), மசாசூசெட்ஸ் தொழல்நுட்ப நிறுவகம் (5), பிரின்ஸ்டன், ஹாவார்ட் (6), யேல், (8), சிகாகோ பல்கலைக்கழகம் (9) ஆகியன 4 முதல் 9 வரையான இடங்களில் உள்ளன. பிரிட்டனிலுள்ள இம்ப்றீயல் கொலேஜ் லண்டன் 10 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பேராதனைப் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் 401 முதல் 500 வரையான பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இப்பட்டியிலுள்ள மற்றொரு இலங்கை பல்கலைக்கழகமான கொழும்பு பல்கலைக்கழகம் உலகத் தவரசையில் 1000+ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் பெங்களூளூருவிலுள்ள இந்திய விஞ்ஞான நிறுவகம் (IIS) முதலிடம் பெற்றுள்ளது. அது உலகத் தரவரிசையில் 301-350 பிரிவில் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் காயித் ஈ ஆசம் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது. அது. உலகத் தரவரிசையில் 401: 500 பிரிவில் இடம்பெற்றுள்ளது.

வருடாந்த டைம்ஸ் உயர்கல்வி உலகத் தரவரிசை 2020  ((Annual Times Higher Education world rankings 2020 )  முழுமையான பட்டியல்

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!