மகாஜனா மாணவர்கள் கேதுசன், டிலக் ஷனுக்கு தங்கம், மன்னார் புனித ஆனாள் வீரர் அபிக் ஷனுக்கு வெள்ளி

0 75

(சுக­த­தாச அரங்­கி­லி­ருந்து நெவில் அன்­தனி)

கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் 89ஆவது ரிட்ஸ்­பறி சிரேஷ்ட மெய்­வல்­லுநர் (பாட­சா­லைகள்) போட்­டியின் இரண்டாம் நாளான நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம், மன்­னார் ஆகிய மாவட்டப் பாட­சா­லை­க­ளுக்கு இரண்டு தங்கப் பதக்­கங்­களும் ஒரு வெள்ளி, ஒரு வெண்­கலப் பதக்­கங்­களும் கிடைத்­தன.

கேதுசன், டிலக் ஷன், அபிக் ஷன், தேனுசன்

 

கோலூன்றிப் பாய்­த­லுக்கு பிர­சித்­தி­பெற்ற தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூ­ரியின் கே. கேதுசன் 20 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் 3.90 மீற்றர் உய­ரத்தைத் தாவி தங்கப் பதக்­கத்தை வென்­றெ­டுத்தார்.

இதே பாட­சா­லையைச் செர்ந்த ஐங்­கரன் டிலக் ஷன், ஆண்­க­ளுக்­கான 16 வய­துக்­குட்­பட்ட கோலூன்றிப் பாய்­தலில் 3.20 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்­கத்தை வென்றார். அவ­ரது சக பாட­சாலை மாண­வ­ரான செல்­வேந்­திரன் தேனுசன் 2.60 மீற்றர் உயரம் தாவி வெண்­கலப் பதக்­கத்தை வென்றார்.

மன்னார் மாணவன் அசத்தல்
மன்னார் புனித ஆனாள் மத்­திய மகா வித்­தி­யா­லய மாணவன் ஏ. அபிக் ஷன், 20 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான 400 மீற்றர் சட்­ட­வேலி ஓட்டப் போட்­டியை 55.05 செக்­கன்­களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்­கத்தை வென்­றெ­டுத்தார்.

மன்­னாரில் மைதான வசதி உட்­பட ஏனைய வச­திகள் இல்­லா­த­போ­திலும் இப் போட்­டியில் வெள்ளிப் பதக்கம் வென்­றமை பெரும் மகிழ்ச்­சியைத் தரு­வ­தாக அபிக் ஷன் குறிப்­பிட்டார். ‘எ­மது பாட­சா­லையில் 200 மீற்றர் சுற்­ற­ள­வு­கொண்ட மைதா­னமே இருக்­கின்­றது.

அதில் சட்­ட­வேலி ஓட்டப் பயிற்­சியில் ஈடு­பட்டு சுக­த­தாச அரங்கில் 400 மீற்றர் ஓடு­பா­தையில் போட்­டி­யி­டு­வது என்­பது சிர­ம­மா­னது. 400 மீற்றர் சட்­ட­வேலி ஓட்­டத்­துக்கு வைக்­கப்­படும் 10 சட்­ட­வே­லி­க­ளுக்­கு­ரிய இடை­வெளி எமது மைதா­னத்தில் இல்லை.

அதன் கார­ண­மாக சுக­த­தாச அரங்கில் எனக்கு தடுக்­கி­யது. எமது பிர­தே­சத்தில் 400 மீற்றர் ஓடு பாதை­யு­ட­னான மைதானம் அமைக்­கப்­பட்டால்  என்னைப் போன்ற இன்னும் பல மன்னார் மாவட்ட மாண­வர்­களால் சாதிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்கும்|| என அபிக்ஷன் தெரி­வித்தார்.

எதிர்­கா­லத்தில் தேசிய மட்­டத்தில் பங்­கு­பற்றி சாத­னைகள் புரிந்து சர்­வ­தேச போட்­டி­களில் பங்­கு­பற்­று­வதே தனது குறிக்கோள் எனவும் அபிக்ஷன் குறிப்­பிட்டார். அபி­க்ஷ­னுக்கு ஸ்டான்லி இசிடோர் லெம்பர்ட் பயிற்சி அளித்­து­வ­ரு­கின்றார்.

சீர­றற கால­நிலை நில­வி­யதால் நேற்­றைய போட்­டி­களில் கலந்­து­கொண்ட பாட­சாலை மாணவ, மாண­விகள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டனர். எனினும் பிற்­பகல் 3 மணி­வரை ஆறு புதிய சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­டன. அவற்றில் மூன்று சாதனைகள் முதலாம் நாளன்று நிலைநாட்டப்பட்ட சாதனைகளைப் புதுப்பிப்பனவாக அமைந்தன.

சீரற்ற கால நிலையால் பல போட்­டிகள் தடைப்­பட்­டதால் சுக­த­தாச அரங்கில் இருட்டில் சில ஓட்டப் போட்­டிகள் நடத்­த­பட்­டமை ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!