வவுனியாவில் வாளுடன் வீட்டுக்குள் புகுந்த 3 இளைஞர்கள் மடக்கிப் பிடிப்பு!

'எதிர்காலத்தில் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டோம்' என பகிரங்கமாக தெரிவித்ததால் மூவரும் விடுவிக்கப்பட்டனர்

0 90

(கதீஷ்)

வவு­னியா மதகு­வைத்­த­குளம் பகு­தியில் அமைந்­துள்ள வீடு ஒன்­றுக்குள் வாளுடன் புகுந்து தாக்­குதல் மேற்­கொள்ள முயற்­சித்த மூன்று இளை­ஞர்­களை அப்­ப­குதி மக்கள் மடக்­கிப்­பி­டித்­துள்­ளனர். இந்தச் சம்­பவம் நேற்றுக் காலை இடம்­பெற்­றுள்­ளது.

குறித்த வீட்­டி­லி­ருந்த ஒருவர் மீது தாக்­குதல் மேற்­கொள்ள முயற்­சித்­த­போது அங்கு வாய்த்­தர்க்கம் இடம்­பெற்­றுள்­ளது.

அதன் பின்னர் குறித்த இளை­ஞர்கள் அங்­கி­ருந்து சென்­றுள்­ளனர். 

பின்னர் குறித்த வீட்­டுக்கு முச்­சக்­க­ர­வண்­டியில் வாளுடன் வருகை தந்த மூன்று இளை­ஞர்கள் வீட்­டாரை வெளியே வர­வ­ழைத்து தாக்­குதல் மேற்­கொள்ள முயற்­சித்­துள்­ளனர்.

எனினும் இத் தாக்­குதல் சம்­பவம் அய­லவர்­க­ளினால் முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது. தாக்­குதல் மேற்­கொள்ள முயற்­சித்த மூன்று இளை­ஞர்­களை அய­ல­வர்­களும் கிராம இளை­ஞர்­களும் இணைந்து மடக்­கிப்­பி­டித்து வீட்­டுக்குள் அடைத்து வைத்து 119 பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கினர். இருப்­பினும் பொலிஸார் அங்கு வரத் தாம­தமா­கினர்.

இந்த நிலையில் கிராம பொது அமைப்­புக்கள் இரு தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யாடிய பின் இணக்­கத்­துக்கு கொண்டு வரப்­பட்­ட­துடன். இளை­ஞர்கள் கொண்டு வந்த வாளை பொது அமைப்­புக்கள் தம் பொறுப்பில் எடுத்துக் கொண்­டனர்.

மேலும், இவ்­வா­றான குற்றச் செல்­களில் ஈடு­ப­ட­மாட்டோம் என கிராம பொது அமைப்­புக்கள் மற்றும் அய­ல­வர்கள் முன்னிலையில் குறித்த மூன்று இளைஞர்களும் தெரிவித்ததையடுத்து அவர்கள் பொதுமக்களினால் விடுவிக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!