ஈரானில் ஆண் வேடமிட்டு கால்பந்தாட்ட அரங்குக்குள் நுழைந்ததால் கைதான பெண் பின்னர் தீக்குளித்து உயிரிழந்தார்

0 76

ஈரானில் கால்­பந்­தாட்டப் போட்­டி­யொன்றை பார்­வை­யி­டு­வ­தற்­காக ஆண் வேட­மிட்டு கால்­பந்­தாட்ட அரங்­குக்குள் நுழைந்­ததால் கைதான பெண் தண்­ட­னைக்கு பயந்து தீக்­கு­ளித்து, ஒரு வாரத்தின் பின்னர் உயி­ரி­ழந்­துள்ளார்.

30 வய­தான சஹார் கோதா­யரி எனும் பெண்ணே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார். ஈரானில் ஆண்­களின் கால்­பந்­தாட்டப் போட்­டி­களை பெண்கள் பார்­வை­யி­டு­வ­தற்கு 1981 ஆம் ஆண்டு முதல் தடை உள்­ளது. அண்­மைக்­கா­ல­மாக பெண்கள் பலர், ஆண்­களைப் போன்று வேட­மிட்டு மைதா­னத்­துக்குள் சென்று போட்­டி­களை பார்­வை­யிட்டு வரு­கின்­றனர்.

சஹார் கோதா­யரி, கடந்த மார்ச் மாதம் ஈரானின் அஸாதி (பார­சீக மொழியில் சுதந்­திரம் என அர்த்தம்) என பெய­ரி­டப்­பட்ட அரங்கில் நடை­பெற்ற, ஆசிய கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் சம்­பியன்ஸ் லீக் போட்­டியில் எஸ்­தெ­கலால் கழ­கத்­துக்கும் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் அல் அய்ன் கழ­கத்­துக்கும் இடை­யி­லான போட்­டியை பார்­வை­யி­டு­வ­தற்­காக மேற்­படி அரங்­குக்கு சென்­ற­போது கைது செய்­யப்­பட்டார்.

3 நாட்கள் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த அவர் பின்னர் வீடு திரும்ப அனு­ம­திக்­கப்­பட்டார். தனக்கு எதி­ரான விசா­ர­ணைக்­காக அவர் 6 மாதங்கள் காத்­தி­ருந்தார்.  கடந்த 2 ஆம் திகதி அவர் தெஹ்ரான் நக­ரி­லுள்ள நீதி­மன்­றத்­துக்கு விசா­ர­ணைக்­காக சென்­றி­ருந்தார். எனினும், நீதி­பதி வரா­மையால் விசா­ரணை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

பின்னர், சஹார் கோதா­யரி தனது கைத்­தொ­லை­பே­சியை எடுப்­ப­தற்­காக நீதி­மன்­றத்­துக்கு திரும்பி வந்­த­போது, அவ­ருக்கு 6 முதல் 2 வரு­டங்கள் வரை­யி­லான சிறைத்­தண்­டனை கிடைக்கும் என சிலர் கூறு­வதைக் கேட்டார்.

இதனால், நீதி­மன்­றத்தின் முன்னால் அவர் தனக்குத் தானே தீ மூட்­டிக்கொண்டார். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட அவர் கடந்த திங்­கட்­கி­ழமை உயி­ரி­ழந்­துள்ளார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.  இவ்­வி­டயம் கால்­பந்­தாட்ட மற்றும் மனித உரிமை ஆர்­வ­லர்கள் மத்­தியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதே­வேளை, பெண்­களை கால்­பந்­தாட்ட அரங்­குக்குள் அனு­ம­திக்கக் கோரி பிரச்­சா­ரங்­களும் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.  பெண்­களை கால்­பந்­தாட்ட அரங்­குக்குள் அனு­ம­திப்­ப­தற்கு ஈரா­னுக்கு ஆகஸ்ட் 31 ஆம் திக­தி­வரை சர்வ­தேச கால்­பந்­தாட்டச் சங்­கங்­களின் சம்­மே­ளனம் காலக்­கெடு விதித்­தி­ருந்­தது.

இக்­கா­லக்­கெடு முடி­வ­டைந்­துள்ள போதிலும் இதுவரை பீபா நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை. ‘9 வயது சிறுமி திருமணம் செய்துகொள்ளலாம். 20 வயதான யுவதி விளையாட்டு அரங்குக்கு செல்லக்கூடாதா’ என மெஹ்யா எனும் ஈரானியர் ஒருவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!