தனது வேலைக்கான கொடுப்பனவுகளை வழங்காததால் தான் இயக்கிய பெக்கோவின் சில்லையும் பெற்றரியையும் திருடி விற்பனை செய்த நபர்!

0 48

(ரெ.கிறிஷ்­ணகாந்)

தனது வேலைக்­கான கொடுப்­ப­னவை வழங்­கா­ததால் பெக்கோ இயந்­தி­ரத்தின் சில்லு மற்றும் பெற்ற­ரியை திருடி விற்ற பெக்கோ இயக்­கு­ந­ருக்கு (சாரதி) 5 வரு­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட 6 மாத சிறைத் தண்­ட­னையும், 2000 ரூபா அப­ராதமும் விதித்து மாவ­னெல்லை நீதிவான் உபுல் ராஜ­க­ருணா தீர்ப்­ப­ளித்­துள்ளார்.

அர­னா­யக்க, உட­கம பிர­தே­சத்தில் காபர்ட் வீதி அபி­வி­ருத்தி வேலைத் திட்­டத்­துக்­காக வாடகை அடிப்­ப­டையில் பெறப்­பட்ட பெக்கோ இயந்­திரம் ஒன்றின் முன்­பக்க சில்­லையும், பெடற்ற­ரி­யை­யுமே சந்­தே­க­நபர் திருடி விற்­பனை செய்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

மேற்படி வீதி அபி­வி­ருத்தி ஒப்­பந்தப் பணி­களை முன்­னெ­டுத்­து­வரும் நிறு­வ­னத்­தினால், மத்­து­கம பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான பெக்கோ இயந்­திரம் ஒன்று வாடகை அடிப்­ப­டையில் பெறப்­பட்­டி­ருந்­தது.

கடந்த 3 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த தின­மொன்றின் இரவு நேரத்தில், பெக்கோ இயந்­தி­ரத்தின் சுமார் 40 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான முன்­பக்க சில்லு மற்றும் பெற்றரி என்­பன திரு­டப்­பட்­டுள்­ள­தாக அதன் உரி­மை­யா­ளரால் அர­னா­யக்க பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது. அதன்­படி, முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்­க­மைய, வெலி­மடை பிர­தேச த்தைச் சேர்ந்த சந்­தே­க­ந­ப­ரான பெக்கோ இயக்­கு­நரை பொலிஸார் கைது­செய்­தி­ருந்­தனர்.

கடந்த காலங்­களில் உரிய வகையில் தனக்கு தான் பணி­யாற்­றிய நிறு­வ­னத்­தினால் கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­ப­டா­த­மை­யி­னா­லேயே, தான் இந்த திருட்டை மேற்­கொண்­ட­தாக பொலி­ஸா­ரிடம் சந்­தே­க­நபர் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில், சந்­தேக நப­ரிடம் பெற்­றுக் ­கொள்­ளப்­பட்ட வாக்­கு­மூ­லத்­துக்­க­மைய, 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டி ருந்த சில்லு ஒன்றையும், 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த பெற்றரியையும் பொலிஸார் கண்டுபிடித்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!