முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்த் ஒரு வருடமாக என்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் -சட்டத்துறை மாணவி குற்றச்சாட்டு

0 45

இந்­திய முன்னாள் உள்­துறை இணை அமைச்­சரும், பாஜ­கவின் சிரேஷ்ட தலை­வர்­களில் ஒரு­வ­ரு­மான சுவாமி சின்­ம­யானந்த் தன்னை ஒரு வருட கால­மாக துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய­தா­கவும், பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­கவும் சட்­டத்­துறை மாணவி ஒருவர் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

23 வய­தான மேற்­படி மாணவி கடந்த மாதம் 22 ஆம் திகதி செல்­வாக்­கு­மிக்க தலைவர் ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்­த­தாக சமூக வலைத்­த­ளங்­களில் வீடி­யோ­வொன்றை வெளி­யிட்டார். மறுநாள் அவர் தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார்.

இந்­நி­லையில், கடந்த ஞாயி­றன்று அவர் மீண்டும் வெளி­வந்தார். பின்னர் தனது முகத்தை மறைத்­துக்­கொண்டு அவர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு செவ்வி அளித்தார்.

சின்­ம­யானந்த் நடத்தும் ஷாஜ­கான்­பூரில் உள்ள ஒரு கல்­லூ­ரியில் சட்­டப்­ப­டிப்பில் சேர்­வ­தற்­காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 73 வய­தான சின்­ம­யா­னந்த்தை சந்­தித்­தாக அந்தப் பெண் தனது 12 பக்க புகாரில் தெரி­வித்­துள்ளார்.
சின்­ம­யா­னந்தா தன்­னு­டைய தொலை­பேசி எண்ணை எடுத்துக் கொண்டு கல்­லூ­ரியில் அனு­மதி அளித்­துள்­ள­தாக அம்­மா­ணவி கூறு­கிறார்.

அவர் தன்னை அழைத்­த­தா­கவும் கல்­லூரி நூல­கத்தில் 5,000 ரூபா சம்­ப­ளத்­துக்கு வேலை வாங்கித் தரு­வ­தா­கவும் கூறி­ய­தாவும், கடந்த அக்­டோ­பரில் தன்னை மாண­வி­களின் விடு­தியில் தங்­கு­மாறு கூறி­ய­தாவும் அம்­மா­ணவி தெரி­வித்துள்ளார்.

பின்னர் அவர் தனது ஆசி­ர­மத்­துக்கு அழைத்­த­தா­கவும். தான் விடு­தியில் குளிக்கும் வீடி­யோவைத் தனக்கு காட்­டி­ய­தா­கவும். ‘அதை சமூக வலைத்­த­ளங்­களில் பர­வ­லாக்­கி­வி­டுவேன் என்று பய­மு­றுத்­தி­ய­தா­கவும் அவர் கூறினார்
இக்­குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்த சின்­மயானந்த் , அர­சி­யலில் தன்னை வீழ்த்த சதி மேற்­கொண்­டுள்­ள­தாக குற்றம் சாட்­டி­யுள்­ளார்.

இதே­வே­ளை, கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பொலிஸ் சிறப்பு விசா­ரணைக் குழு­வொன்று என்­னிடம் 11 மணித்­தி­யா­லங்கள் விசா­ரணை நடத்­தி­யது. வல்லுறவு தொடர்பாக நான் அவர்களிடம் தெரிவித்தேன். அனைத்து விடயங்களையும் அவர்களிடம் கூறியபோதிலும் சின்மயானந்த் இன்னும் கைது செய்யப்படவில்லை’ என அப்பெண் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!