ஆஷஸ் கலசத்தை வெல்வதே கனவாக இருந்தது – அவுஸ்திரேலிய அணித் தலைவர் டிம் பெய்ன்

0 55

ஒரு கிரிக்கெட் வீரர் என்ற வகையில் இங்­கி­லாந்தில் ஆஷஸ் கல­சத்தை வெல்­வதே தனது நெடு­நா­ளைய கன­வாக இருந்­தது என அவுஸ்­தி­ரே­லிய அணித் தலைவர் டிம் பெய்ன் தெரி­வித்­துள்ளார்.

மென்­செஸ்டர் ஓல்ட் ட்ரபோர்ட் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற நான்­கா­வது டெஸ்ட் போட்­டியில் 185 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றதை அடுத்து ஆஷஸ் கல­சத்தை அவுஸ்­தி­ரே­லியா தக்­க­வைத்­துக்­கொண்­டது.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் கடந்த வருடம் நடை­பெற்ற ஆஷஸ் தொடரில் வெற்­றி­பெற்ற அவுஸ்­தி­ரே­லியா, தற்­போது நடை­பெற்­று­வரும் ஐந்து போட்­டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 2 – 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்­னிலை வகிக்­கின்­றது. ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள கடைசி டெஸ்ட் போட்­டியில் இங்­கி­லாந்து வெற்­றி­ பெற்றால் தொடர் சம­நி­லையில் முடி­வ­டையும்.

தொடர் ஒன்று சம­நி­லையில் முடி­வ­டைந்தால் அதற்கு முன்னர் நடை­பெற்ற தொடரில் ஆஷஸ் கல­சத்தை வென்ற அணிக்கே அது சொந்­த­மா­வது வழமை. அதன் அடிப்­ப­டை­யி­லேயே ஆஷஸ் கல­சத்தை அவுஸ்­தி­ரே­லியா தக்­க­வைத்­துக்­கொண்­டுள்­ளது.

தென் ஆபி­ரிக்­காவில் 2018இல் இடம்­பெற்ற பந்தை சேதப்­ப­டுத்­திய விவ­கா­ரத்­தி­லி­ருந்து மீள்­வ­தற்கு வீரர்கள் வெளிப்­ப­டுத்­திய ஆற்­றல்கள் அளப்­ப­ரி­யது எனவும் 2001க்குப் பின்னர் ஆங்­கி­லேய மண்ணில் முதல் தட­வை­யாக ஆஷஸ் கல­சத்தை வெல்ல கிடைத்­தமை பெரிய விடயம் எனவும் அவர் கூறினார்.

“சிலர் ஓய்ந்­து­வி­டலாம் அல்­லது தொடர்ந்து போரா­டலாம். அந்த வகையில் பந்தை சேதப்­படுத்திய விவ­கா­ரத்­தினால் எதிர்­கொண்ட நெருக்­கடி, அழுத்­தங்­க­ளி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லியா மீண்டு வந்து திற­மையை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றது.

தற்­போது அணித் தலை­வ­ராக இருப்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன். அத­னையும் விட எனக்கு கிடைத்­துள்ள சிறந்த வீரர்கள், பயிற்றுநர் குழாத்தினர் குறித்து பெருமை அடைகின்றேன்” என அணித் தலைவராக முதல் முயற்சியிலேயே ஆஷஸ் கலசத்தை வென்ற டிம் பெய்ன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!