வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 13: 1993-இஸ்ரேல், பலஸ்தீன தலைவர்களின் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

0 95

1503: இத்தாலிய சிற்பக்கலைஞரும் பொறியியலாளரும் கவிஞருமான மைக்கல் ஏஞ்சலோ புகழ்பெற்ற டேவிட் என்ற சிலையை உரு­வாக்கும் பணி­களை ஆரம்­பித்தார்.

1759: கனடாவின் கியூபெக் நக­ருக்­கு அருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்­தா­னியப் படைகள் பிரெஞ்சுப் படை­களைத் தோற்­க­டித்­தன.

1993 :இஸ்ரேல்இ பலஸ்தீன தலைவர்களின் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

1788: நியூயோர்க் நகரம் ஐக்­கிய அமெ­ரிக்­காவின் தற்­கா­லிக தலை­ந­க­ராக அறி­விக்கப்பட்டது.

1847: மெக்ஸிக்கோ அமெரிக்கப் போரில் அமெரிக்கப் படையினர் மெக்ஸிக்கோ நகரைக் கைப்பற்றினர்.

1898: ஹனிபல் குட்வின், செலு­லோயிட் புகைப்­படச் சுருளைக் கண்டுபிடித்தார்.

1899: அமெரிக்காவில் இடம்­பெற்ற மோட்டார் வாகன விபத்தில் ஹென்றி பிளிஸ் என்­பவர் கால­மானார். அமெ­ரிக்­காவில் மோட்டார் வாகன விபத்தில் உயி­ரி­ழந்த முதல் நபர் இவர்.

1906: இறக்கை பொருத்தப்­பட்ட விமானம் ஐரோப­பாவில் முதல் த­வை­யாக பறந்தது.

1914: முதலாம் உலகப் போரில் ஜேர்ம­னியின் நமீ­பியா மீது தென்­ ஆ­பிரிக்கப் படையினர் தாக்­கு­தலை ஆரம்­பித்­தனர்.

1923: ஸ்பெயினில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்­றினார்.

1939: இரண்டாம் உலகப்போரில் கனடா குதித்தது.

1940: இரண்டாம் உலகப் போரில் எகிப்­தினுள் இத்­தாலி நுழைந்தது.

1940: இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியின் குண்­டுகள் லண்டன் பக்­கிங்ஹாம் அரண்­ம­னையைச் சேதப்படுத்தின.

1943: சியாங் காய் ஷேக், சீனக் குடி­ய­ரசின் அதிப­ரானார்.

1948: நிஜாம் ஆட்சியின் கீழிருந்த ஹைத­ரா­பாத்தை இந்திய ஆளு­மையின் கீழ் இந்தியப் படைகள் கொண்டு வந்­தன.

1953: சோவியத் யூனி­யனின் உயர் பத­வி­யான சோவியத் கம்­யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய­லா­ள­ராக நிகிட்டா குருஷேவ் நிய­மிக்­கப்­பட்டர்.

1968: வோர்சா ஒப்­பந்­தத்திலிருந்து அல்­பே­னியா வில­கி­யது.

1971: நியூயோர்க்கில் சிறைக்­கை­தி­களின் கிளர்ச்­சியைக் கட்­டுப்­ப­டுத்த பொலிஸார் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையில் 42 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1989: தென்­ ஆ­பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான மாபெரும் போராட்டம் பேராயர் டெஸ்மண்ட் டூட்டு தலை­மையில் இடம்பெற்றது.

1993: நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சு­வார்த்தைகளை அடுத்து பலஸ்தீனத் தலைவர் யாசிர் அரபாத்­துக்கும் இஸ்ரே­லியப் பிர­தமர் இட்சாக் ரபீனுக்கும் இடையில் சமா­தான ஒப்­பந்தம் எட்டப்பட்டது.

1994 : யூலிசெஸ் விண்கலம் சூரி­யனின் தென் முனையைக் கடந்­தது.

1999 : மொஸ்­கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 119 பேர் கொல்­லப்­பட்­டனர்.

2001: செப்டெம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் அமெரிக்காவில் மீண்டும் சிவில் விமானப் போக்குவரத்து ஆரம்பமாகின.

2008: இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளால் 30 பேர் உயிரிழந்ததுடன் 130 பேர்காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!