இன்னும் இருபது நாட்கள்: பிக்பொஸ் வீட்டில் கமலின் திட்டம் என்னவாக இருக்கும்?

0 1,302

-ஏ.எம். சாஜித் அஹமட்-

ஒரு வழி­யாக சேரனை இர­க­சிய அறைக்குள் அனுப்­பி­விட்டார் கமல். இவ்­வாரம் பிக்பொஸ் வீட்டில் சிறப்­பான பல சம்­ப­வங்கள் நடந்­தேறிக் கொண்­டி­ருக்­கின்­றன.வீட்டில் நடப்­ப­வற்றை சேரன் பார்த்துக் கொண்­டி­ருக்க, பலரும் பல­வி­த­மாக பேசத் தொடங்­கினர்.

இர­க­சிய அறைக்கு யாரை அனுப்பப் போகி­றார்கள்? எனும் தொடர் கேள்­விக்கு முற்­றுப்­புள்ளி வைத்து விட்­டது பிக்பொஸ் வீடு. பிக்போஸ் வீட்டில் வசிப்­ப­வர்­களின் குடும்ப உற­வுகள் கொஞ்சம் கொஞ்­ச­மாக வரத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

முகினின் அம்­மாவும், தங்­கையும் ஆரம்­ப­மாக வர­வ­ழைக்­கப்­பட்­டார்கள். ஆடிப்­பாடி தனது மனதின் நினை­வ­லை­களை தெறிக்க விட்டார் முகின்.

அடுத்த நாள்தான் பிக்பொஸ் வீட்டில் பூகம்பம் ஆரம்­பித்­தது. லொஸ்­லி­யாவின் அம்மா, அப்பா, தங்­கைகள் அனை­வரும் வீட்டின் உள்ளே அழு­கு­ரலாய் காலடி எடுத்து வைத்­தனர்.  லொஸ்­லியா இவ்­வா­ரத்தின் தலைவி. வனிதா, தர்ஷன், லொஸ்­லியா மூவரும் தலைவர் போட்­டிக்­காக தெரிவு செய்­யப்­பட்­டார்கள். இரு கைக­ளிலும் நீர் நிரம்­பிய பாத்­தி­ரத்­தினை வைத்துக் கொண்டு அரை மடிப்பில் நீண்ட நேரம் நிற்க வேண்டும்.

வனி­தாவும், தர்­ஷனும் போட்­டி­யினை விட்டு இடை­ந­டுவில் வெளியேற, இவ்­வா­ரத்தின் வீட்டின் தலை­வ­ரானார் லொஸ்­லியா.எண்­பது நாட்­க­ளுக்குப் பிறகு பிக்போஸ் வீட்டில் முதல் தட­வை­யாக தலை­வி­யா­கி­யி­ருக்­கிறார்.இதனை ஒரு சந்­தர்ப்­ப­மாக பயன்­டுத்தி அடுத்த கட்­டத்­தினை நோக்கி நகர்வார் என எதிர்­பார்க்­கப்­பட்­டாலும், அது நடந்­தே­ற­வில்லை.

லொஸ்­லி­யாவின் அப்பா கடும் கோப­மாக வந்து எச்­ச­ரிக்கை விடுத்­து­விட்டார். உன்னை எதற்­காக அனுப்­பினேன்? பலரும் என்னை காறித் துப்­பு­கி­றார்கள், அவ­மா­னப்­ப­டுத்­து­கி­றார்கள் என போட்டு வாங்­கி­விட்டார்.

லொஸ்­லி­யாவின் முழுக்­கு­டும்­பமும் அழுது புலம்பி பிக்பாஸ் வீட்­டினை வேறு திசைக்கு மாற்றி விட்­டார்கள்.
இன்னும் இரு­பது நாட்கள் மாத்­தி­ரமே பிக்போஸ் வீட்டில் எஞ்­சி­யுள்­ளது. இந்த நாட்­களில் தாக்குப் பிடிக்கக் கூடி­ய­வ­ராக சேரன் இருக்­கிறார். சேரன் மீதான மாற்­றியல் விம்பம் பிக்பாஸ் வீட்டில் தோன்­றி­யி­ருக்­கி­றது.

கவி­னுக்கு மனது குழப்­ப­ம­டைந்து விட்­டது. இதனை எப்­படி சமா­ளிப்­பது என்று புரி­யாமல் திக்­கு­முக்­கா­டு­கிறார். எவ்­வித கார­ணங்­களும் இன்றி சாண்­டி­யுடன் முரண்­பட்டுக் கொள்­கிறார்.

லொஸ்­லி­யா­விற்கும், கவி­னுக்கும் இடையில் தொடக்கி வைகப்­பட்ட ஊடல் எனும் தீ இன்று பிக்பொஸ் வீடு முழுக்க பற்றி எறி­கி­றது. இந்த தீயில் இரு­வரும் கரு­கியே விட்­டார்கள். ஷெரீன் மிக நிதா­ன­மாக பிக்பொஸ் வீட்டில் போட்டி போடு­பவர்.

ஷெரி­னுக்கும், தர்­ஷ­னுக்கும் இடை­யி­லான உற­விளை வனிதா தவ­றாக பேசும் போது பொங்கி எழுந்து விட்டார் ஷெரீன்.

தர்­ஷ­னுக்கும், தனக்­கு­மான உற­வினை அழ­கிய முறையில் தெளிவு­ப­டுத்­தினார். இரு­வ­ருக்­கு­மான உறவில் வெளிப்­பட்டு நிற்கும் பிரி­கோட்­டினை தைரி­ய­மாகக் கூறினார்.

லொஸ்­லியா போன்று ஷெரீன் தனக்­கான அடை­யா­ளத்­தினை உரு­வாக்­க­வில்லை. கவின் போன்று தர்ஷன் தன்­னு­டைய அடை­யா­ளத்­தினை உரு­வாக்­க­வில்லை.

பிக்பொஸ் என்­பது நூறு நாட்கள் ஒரே வீட்டில் தங்­கி­யி­ருந்து போட்டி போடு­வதும், இறு­தியில் வெற்­றி­ய­டை­வ­தும்தான் என்­ப­தினை அவர்கள் நன்கு புரிந்து வைத்­தி­ருக்­கின்­றனர். இதனை மறந்­த­வர்­கள்தான் காதல் வலையில் சிக்கி அல்­லுண்டு போகின்­றனர்.

கமலைப் பொறுத்­த­வரை சிறு சிறு பிரச்­சி­னை­களை பூதா­க­ர­மாக்கி பொது வெளிக்கு கொண்டு வந்து விசா­ரிக்­காமல் விட மாட்டார்.

பிக்போஸ் வீட்­டினைப் பொறுத்­த­மட்டில் கமலின் ஊட­லாட்டம் மிக முக்­கி­ய­மா­னது. லொஸ்­லி­யாவின் அப்­பா­வினை வீட்டின் உள்ளே அனுப்பும் போது கண்­டித்­துதான் அனுப்­பி­யி­ருப்­பார்கள். அப்­பொ­ழு­துதான் நிகழ்ச்­சியின் பார்வை வீதம் அதி­க­ரிக்கும்.

எவ்­வ­ள­வுதான் காதல், அன்பு, பாசம், உறவு என்று பேசி­னாலும் தலை­தூக்கி நிற்­பது பிக்பொஸ் நிகழ்வின் சூடு பிடிக்கும் பார்­வை­யா­ளர்­களின் அதி­க­ரிப்பு அஜந்தா மாத்­தி­ரமே. இதற்­காக கமல் போடும் இரா­ஜ­தந்­தி­ரங்கள் ஏராளம்.

பிள்­ளை­யினை கிள்ளி தொட்­டி­லி­னையும் ஆட்­டு­கின்ற வித்தை கம­லுக்கு நன்­றா­கவே தெரியும். ஓவ்­வொ­ருத்­தரின் குண நலத்­தினை அறிந்து கொண்டு, அவ­ருக்கு ஏற்றால் போல சந்­தர்ப்­பங்­களை அமைத்து, பல­த­ரப்­பட்ட கோணங்­களில் விளை­யாட விடு­கிறார்.

ஆரம்­பத்தில் குறும்­புத்­த­ன­மாக பார்க்­கப்­பட்ட விட­யங்கள், பின்­நாட்­களில் பெரும் பேசு பொரு­ளாக மாறி பிக்பொஸ் வீட்­டினை கலங்­க­டிக்கச் செய்­கி­றது. இதற்­கெல்லாம் காரணம் கமலின் திரு­வி­ளை­யா­டல்தான். ஆரம்­பத்தில் கவின் ஜாலி­யான பைய­னா­கவே பிக்பொஸ் வீட்டின் உள்ளே வந்தார். அபி­ராமி, ஷெரீன், சாக்ஷி, ரேஷ்மா என எல்லாப் பெண்­க­ளு­டனும் இளமை துள்­­ளுடன் பழ­கினார். இதனை இலே­சாக விட்டு வைத்த கமல், ஒவ்­வொரு துளித் துளி­யாக கவினை மடக்கத் தொடங்­கினார். இற்­றை­வ­ரைக்கும் இதி­லி­ருந்து கவினால் மீள முடி­ய­வில்லை. இதுதான் கமல்.

இறு­தி­யாக லொஸ்­லி­யா­விடம் கவினை மாட்­டி­விட்டார். இப்­பொ­ழுது இரு­வரும் திண்­டா­டு­கி­றார்கள். பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்­கி­றார்கள்.

சரி­யான முறையில் போட்­டியில் விளை­யா­டு­கி­றார்கள் இல்லை. இதற்­கெல்லாம் ஆரம்ப கட்ட வேலை பார்த்­தது கமல்தான். கமலின் இவ்­வி­ளை­யாட்டில் சிக்கிக் கொள்­ளாமல் தப்பித்துப் போனவர்கள் ஒரு சிலர்தான். அவர்களும் இன்னும் இருபது நாட்களில் பிரச்சினைகளின் வடிவத்திற்குள் சிக்கிக் கொள்வார்கள்.

இனி பிக்பொஸ் வீடு மிகத் தீவி­ர­மாக சூடு பிடிக்கும். இவ்­வா­ரத்தின் வெளியேற்­றத்­தோடு இதற்­கான வேலை­களை கமல் ஆரம்­பிப்பார். யார் இன்னும் இரு­பது நாட்கள் பிக்பொஸ் வீட்டின் உள்ளே நிரந்­த­ர­மாக நின்று வெற்றி பெரு­வார்கள் என்­பதை இனி­வரும் கமலின் திட்­டங்கள் சொல்லும். அது­வ­ரைக்கும் அசையாதிருப்போம்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!