நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 36

0 125

-“கலாபூஷணம்” பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்-

(சென்ற வாரத் தொடர்ச்சி)
சத்­தி­யனை ஏறிட்டுப் பார்த்து நீங்க என் மேல வச்­சி­ருக்­கிற அன்­புக்கும் பரி­வுக்கும் ரொம்ப தேங்ஸ் மிஸ்டர் சத்­தியன்! என்றாள் நிவேதா. சத்­தியன், நிவே­தாவை பரி­வு டன் நோக்­கினான்.

இனி அதி­லி­ருந்து

னி எனக்­குன்னு ஓரு பியுச்சர் இல்ல மிஸ்டர் சத்­தியன்! என் லைப்ல இனி எனக்கு ஹேப் என தொழில் தான்­அ­துக்­கான என் முதல் பிர­வேஷம் இது தான், என்ற நிவேதா, வான் வெளியை வெறித்துப் பார்த்­த­வாறே” என்னைப் பாழ் படுத்­தி­ய­வ­னுக்கு தண்­டனை வாங்கிக் கொடுப்­பது தான் இந்த முதல் பிர­வே­ஷத்தின் லட­சியம் என்றாள்.
உங்க லட்­சி­யத்­துல மாற்றம் இல்­லையா மிஸ் நிவேதா ?

ஓவியம்: கலாபூஷணம் எஸ்.டி.சாமி

 

இதுல என் பிரஸ்டீச் ப்ரப­ளமும் கலந்­தி­ருக்­கு­இ­துல நான் பெயி­லா­கிட்டா எனக்கு வாழக்­கை­யில தொழிலும் இல்ல, அப்­புறம் பியுச்­சரும் போயிடும். குறுக்கும் நெடுக்­கு­மாக சற்று உலா­விய சத்­தியன் மெது­வாக நிவே­தாவின் பக்கம் திரும்பி நிவேதா ! உங்க பியுச்­சர்ல எனக்கும் பங்கு இருக்­குன்னு நான நெனைக்­கிறேன் என்ற சத்­தி­யனைப் பார்த்த நிவேதா ஒப் கோர்ஸ ! ் என்றாள்.

நிவே­தாவை தீட்­சண்­ய­மாகப் பார்த்த சத்­தியன் அவளை நோக்கி நான் உங்­களை மொி பண்ணிக் கொள்ள பரி­பு­ர­ண­மாக விரும்­பு­கிறேன் நிவேதா ! என்றான். ஓமை கோட் ! என சத்­தி­யனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் நிவேதா.

ஒரு துளி விஷம் கலந்த ஒரு குடம் பால் நான் சத்­தியன் ! என தான் யார் ? தன் நிலை என்ன ? என்­பதை மிகத் தௌிவாக சத்­தி­ய­னுக்கு விளக்­கினாள், நிவேதா. நடந்து போன சம்­ப­வத்தை கனவா நான் மறந்­திட தயார் நிவேதா ! என்றான், சத்­தியன்.

ஆனா, நடந்து போன அந்த சம்­ப­வத்தை நான் கனவா மறந்­திட என்னால் முடி­யாது மிஸ்டர் சத்­தியன். ! ஏன்னா வேலி தாண்டிப் போய் பாழ்­பட்டுப் போன பயிர் நான் என நிவேதா கென்ன போது அவ­ளுக்கு ஆழகை பீரிட்டுக் கொண்டு வந்­தது.

நாங்க படிச்­ச­வங்க நிவேதா ! ஆனா, சில நேரங்­கள்ல, சில விஷ­யங்­கள்ல எங்­க­ளுக்கு அடிப்­படை அறிவு கூட இல்­லாத பாம­ர­னுக்­குள்ள அறிவு கூட­இல்­லாமப் போகுது. நாங்க ஒரத்­தர ஒருத்தர் புரி­ஞ­சுக்­கிட்டு வாழ முடி­யும்ன்னு நான் நெனைக்­கிறேன்.

வேலி தாண்டி முட் புதரில் விழுந்து கிழி­ஞசுப் போன சீலை நான், உங்கள் வாழ்க்­கையில் எந்­த­வி­த­மான பசு­மை­யையும் ஏற்ற முடி­யா­த­வ­னாகி விட்­டவள் நான். மிஸ்டர் சத்­தியன் ! உங்க வாழ்­கை­யில ஔி ஏற்ற ஒரு பாக்­கி­வதி நீங்கள் தேடி வரும் வரை எங்­கா­வது காத்­துக்­கி­ட­டி­ருப்பாள். தயவு செய்து நீஙகள் அவளைத் தேடிக் கெபள்­ளுங்கள்.

அதற்கு முன்­னால பால்ன்னு நெனைச்சு தயவு செஞ்சு நீஙக விஷத்த தேர்­நது எடுத்­தி­டா­தீங்க ! எனக் கண்ணீர் சிந்தி, இரு கைக­ளையும் கூப்பி அவனை வணங்­கினாள், நிவேதா.  நீதி­மன்­றத்தில் கைதிக் கூண் டில் சுரேஷ் நின்றுக் கொண்­டி­ருந்தான்.

பார்­வை­யா­ளர்­ப­கு­தியில் சுகந்­தியின் தாய் தேவி, அண்ணன் முரளி, தந்தை கணேசன் உட்­பட இன்னும் பலர் குழுமி இருந்­தனர். நோ்மைக்­காக வாதா­டு­வதில் புகழ் பெற்ற ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­னியும் சுரேஷின் உடன் பிறந்த அண்­ண­னு­மா­கிய ரகு, சுரே­ஷுக்கு எதி­ராக, சுரேஷால் கொலை செய்­யப்­பட்ட அவன் மனைவி சுகந்­தியின் சார்பில் வாதட ஆயத்­த­மானார்.

கடந்த தவ­ணையில் அதி முக்­கிய சாட்­சி­யாக ஓரு பெண்ணை இந்த வழக்கில் ஆஜர்­ப­டுத்­து­வ­தாக எமது லோயர் நிவேதா அவர்கள் சொன்­னாராம். யுவர் ஹொனர் ! அந்த சாட்­சியை ஆஜர் செய்ய எனக்கு அனு­மதி தரும்­படி கனம் கோர்ட்டார் அவர்­களை மிகவும் தாழ்­மை­யுடன் கேட்டுக் கொள்­கிறேன் என ரகு கூறி­யதும் குற்­ற­வாளிக் கூண்டில் நின்றுக் கொண்­டி­ருந்த சுரேஷும் நீதி மன்றத் தினுள்­ளேயும் வெளியேயும் குழுமி இருந்த பார்­வை­யா­ளர்­க­ளிடம் யார் அந்த சாட்சி ! என்­றும யார் அந்த பெண் !! என்றும் ஆவலும் பர­ப­ரப்பும் ஏற்­பட்­டது,

யெஸ் ! பெர்­மிஷன் கிரான்டட் ! என நீதி­பதி அமைதி வழங்­கி­யதும் ரகு­வையும் நிவே­தா­வையும் தவிர நீதி­பதி உட்­பட வக்­கீல்கள் மற்றும் ஏனைய ககல பார்­வை­யா­ளர்­க­ளி­டமும் ஆவல் உந்­தி­யது.

கனம் நீதி­பதி அவர்­களே ! அந்த சாட்­சி­யாக நான் எமது லோயர் மிஸ் நிவேதா அவர்­களைக் கூப்­பி­டு­கிறேன்.
ரகுவின் வார்த்­தை­களைக் கேட்­டதும் நீதி­பதி உட்­பட சுரேஷும் திகைப்படைந்தனர். என்ன! லோயர் நிவே­தா­வையா? என திகைப்­புடன் ரகு வைப் பார்த்துக் கேட்டார், நீதி­பதி.

ஆம் ! கனம் கோர்ட்­டார்­களே ! என்றார், ரகு உறு­தி­யாக. என்ன ! அவரா அந்தப் பெண் !! என திகைப்­புடன் மீண்டும் ரகுவைப் பார்த்துக் கேட்டார்.

 

                                                                                                                                                                (அடுத்த வாரம் தொடரும்)

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!