படப்பிடிப்புத் தளத்தில் பிளாஸ்டிக் போத்தல்களைத் தவிர்ப்பதற்கு கூலி நம்பர் 1 படக்குழுவினர் தீர்மானித்தமைக்கு பிரதமர் மோடி பாராட்டு

0 135

படப்­பி­டிப்புத் தளத்தில் பிளாஸ்டிக் போத்­தல்­களைத் தவிர்ப்­ப­தற்கு கூலி நம்பர் 1 படக்­கு­ழு­வினர் மேற்­கொண்ட தீர்­மா­னத்­துக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி பாராட்டுத் தெரி­வித்­துள்ளார்.

பிளாஸ்டிக் பாவ­னையை குறைப்­ப­தற்கு இந்­திய அர­சாங்கம் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது. ஒரு தடவை மாத்­திரம் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய பிளாஸ்டிக் பொருட்­க­ளுக்கு ஒக்­டோபர் 2 ஆம் திகதி முதல் இந்­தி­யாவில் தடை அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

நடிகர் வருண் தவான்

இந்­நி­லையில், கூலி நம்பர் 1 எனும் பொலிவூட் படத்தின் படக்­கு­ழு­வினர் தமது படப்­பி­டிப்­புத் தளத்தில் பிளாஸ்டிக் போத்­தல்­க­ளுக்குப் பதி­லாக உலோக (ஸ்டீல்) போத்­தல்­களை பயன்­ப­டுத்தத் தீர்­மா­னித்­துள்­ளனர்.

ஸ்டீல் போத்­தல்­க­ளுடன் படக்­கு­ழு­வினர் காணப்­படும் புகைப்­ப­ட­மொன்­றையும் அப்­ப­டத்தின் நடிகர் வருண் தவான் வெளி­யிட்டார்.

சாரா அலி கான்

இத்­தீர்­மா­னத்தை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி டுவிட்­டரில் பாராட்­டி­யுள்ளார்.

கூலி நம்பர் 1 படத்தில் வருண் தவான், சாரா அலி கான் ஆகியோர் பிர­தான பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­றனர்.

வருண் தவானின் தந்தை டேவிட் தவான் இப்படத்தை இயக்குகிறார்.

அடுத்த வருடம் மே மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!